தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த இனிப்புக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை துரைசாமிபுரத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ரஞ்சிதம் மற்றும் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் இனிப்புக்கடை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் கடைகளை திறக்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமல் […]
