இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்யச் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சியாமிஸ் நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 150பேர் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நேற்று முன்தினம் அங்குள்ள சிலியூர் ஆற்றை சுத்தம் செய்தனர். ஆற்றில் இருந்த அளவுக்கதிகமான நீர் மற்றும் பாறைகளுக்கு நடுவே மாணவர்கள் ரயில் பெட்டியை போல கைகோர்த்துக்கொண்டு மறு கரைக்குச் செல்ல 21 மாணவர்கள் முயற்சி […]
