இந்தோனேசியாவில் உள்ள அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 37.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
