திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசின் தடையை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட பொது செயலாளரான சுரேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் […]
