இந்து மகாசபை கட்சியின் முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மகா சபையின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் பிற மதங்களை விமர்சித்து சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் புதுக்கடை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். […]
