சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்ககாகவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் மிரட்டலில் ஈடுபட்டதாக சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலிஸார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். […]
