பாகிஸ்தானில் இருக்கும் இந்து தர்மசாலா கட்டிடம் இடிக்கப்படக்கூடாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்பு இந்துக்கள் மற்றும் சீக்கியர்களால் கைவிடப்பட்ட சொத்துக்கள் இடிபிபி என்ற வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் தங்களது பராமரிப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் குமார் என்ற சிறுபான்மையினரின் ஆணைய உறுப்பினராக உள்ளவர், இந்து தர்மசாலா கட்டிடத்தை இடிபிபி இடித்து தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதற்கு புகைப்படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தார். இதற்கு […]
