இந்து சமய உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், 10 வருடங்களுக்கும் மேலாக ஓடாமல் இருந்த சமயபுரம், திருத்தணி கோவில் தங்கத்தேர் ஓட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா இதற்கான கட்டுப்பாட்டு அறையை சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையகரத்தை முதல்வர் திறந்து வைத்தார். மேலும் கோவில்களில் […]
