நானே வருவேன் படத்திற்காக தனுஷ் வில்வித்தை கற்றுக் கொண்டுள்ளார். தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். பல ஆண்டுகள் கழித்து அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் எனும் படத்திற்கு நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அவர் இசையில் அனைத்து பாடல்களும் தயாராகிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்தார். மேலும் இப்படத்திற்கான சூட்டிங் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக தனுஷ் வில்வித்தை கற்றிருக்கிறார். தனுஷுக்கு ஷிஹான் ஹுசைனி தான் வில்வித்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். […]
