ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றார். துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் (75 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, உஸ்பெகிஸ்தான் வீராங்கனையான மவ்லுடா மோவ்லோனோவாவுடன் மோதினார். இதில் 5-0 என்ற கணக்கில் பூஜா ராணி வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். […]
