கூகுள் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவிக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த ஐடி மாணவர்களுக்கு அதிக ஊதியத்துடன் பணி வாய்ப்பை கொடுத்து வருகிறது. அதன்படி, பீகார் மாநிலத்தில் வசிக்கும் சம்ப்ரீத்தி என்ற ஐடி மாணவிக்கு கூகுள் நிறுவனம் 1.10 கோடி சம்பளத்துடன் பணி வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த மாணவி, கடந்த 2021 ஆம் வருடம், மே மாதத்தில் டெல்லியில் உள்ள டெக்னாலஜி கல்லூரியில் பி.டெக் […]
