இந்தியாவில் இருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காததால் தாங்கள் தினசரி செத்துக் கொண்டிருப்பதாக அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி Seneca கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் வாசுதேவ் (21) பகுதிநேர பணிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ரொரன்றோவில் உள்ள Sherbourne சுரங்க ரயில் நிலையத்துக்கு வெளியே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். […]
