பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 […]
