தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007ஆம் வருடம் சுற்றுலா விசா மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை பராமரித்து கொள்ளவும் அவர்களின் வீட்டு வேலை செய்யவும் ஆள் தேவை என்று கூறியதை அடுத்து அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். முதலில் அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் நல்லபடியாக நடத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அடிமை போன்று நடத்தியதாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசக்கூடாது என்று […]
