முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் 1983-ம் வருடம் குவைத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு ஏறிந்து வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றவர் இக்பால் சிங். தற்போது 62 வயதான இவர் அமெரிக்கா சென்று குடியேறி, தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் பென்சில்வேனியாவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வரும் இவர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். […]
