Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா பரிசோதனை பண்ணிட்டு வாங்க…. ராணா திருமணத்தில் கட்டுப்பாடு….!!

நடிகர் ராணா திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற தமிழ் படங்களில் நடித்து  பாகுபலி படத்தின் வில்லனாக மிரட்டி பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். ஹைதராபாத்தில் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து தற்போது திருமணத்திற்கு தயராக உள்ளார் நடிகர் ராணா. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபின்பு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெளிநாட்டில் தவித்த தமிழக மாணவ மாணவிகள்…. தனி விமானத்தில் அழைத்து வந்த சோனு சூட்….!!

பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை  இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வலி இல்லா மரணம்” சுஷாந்தின் கடைசி கூகுள் தேடல்…. வெளியான வலிமிகுந்த தகவல்….!!

நடிகை சுஷாந்த் இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய தகவல்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். மும்பையில் கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு மன அழுத்தம்தான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சுஷாந்த் காதலி ரியா, தந்தை, நண்பர்கள், குடும்பத்தினர் உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் ,நடிகைகள், என்று அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“யூடியூபை கலக்கும் பாடல்” மாஸ் காட்டும் சூர்யா…!!

நடிகர் சூர்யா நடித்த சுரரை போற்று திரைப்படத்தின் “காட்டு பயலே” பாடல் யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.   நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் படம் ‘சூரரைப்போற்று’ இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காட்டு பயலே” என்ற பாடல் இந்தியாவில் டாப் 100 பாடல்களில் ஒன்றாக இடம் பிடித்து யூடியூப் டண்டிங்கில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கதாநாயகிக்கு சிறப்பு தேசிய விருதை பெற்றுக் கொடுத்த ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராதன் இப்படத்தையும் இயற்றியுள்ளார்.   சூர்யாவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் இணையும் விஜய்-அட்லி…. அடுத்த வெற்றிப்படத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்….!!

இயக்குனர் அட்லி மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   இயக்குனர் அட்லி 2013 ஆம் ஆண்டு வெளியான “ராஜா ராணி” எனும் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கென முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது மீண்டும் அட்லி விஜயுடன் இணைய […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்த மாதிரி படம்…. அந்த மாதிரி படம்…. வேறுபாடு இல்லை எதிலும் நடிப்பேன் – சமந்தா

பிரபல நடிகை சமந்தா எல்லாவித கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகை சமந்தாவிடம் ‘நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் அல்லது வர்த்தக படம் இவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்’ என கேட்டபோது அவர் கூறிய பதிலாவது “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும், வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறு மாதிரி இருக்கும் என பிரித்து பார்த்து நான் கணக்கு போடுவது இல்லை. நான் சினிமா துறைக்கு எதிர்பாராமல் வந்த நடிகை  […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஏழை எளியவர்களை காத்த அபிராமி ராமநாதன்…. கவுரவப்படுத்தி அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய அரசு…!

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை கவுரவப்படுத்தி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி ராமநாதன் சினிமா தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர். ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் தன் சொந்த செலவில் பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். எனவே மத்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலியை கரம்பிடித்த பிரபாஸ் பட டைரக்டர்….. உறவினர்கள் கூட எளிமையான திருமணம்…!!

சஹோ படத்தை இயக்கி பிரபலமான டைரக்டர் சுஜித்க்கு திருமணம் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சகோ படத்தை இயக்கி பிரபலமானவர் சுஜித். மெகா பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக பாராட்டுகளை பெற்றிருந்தார். ஷ்ரத்தா கபூர், சர்வானந்த் நடித்த ராஜா ராணி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தை சிரஞ்சீவி நடிக்க தெலுங்கில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுஜித் சில வருடங்களாக வள்ளி […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச பட விழாவில் கார்த்தி படம்…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!

கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் சர்வதேச படவிழாவில் வெளியிட இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கார்த்திக், நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் “கைதி”. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மட்டுமே மையமாக வைத்து திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி திரைப்படம். இப்படத்தினால் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா

உடல் ஆரோக்கியம் அவசியம்…. சைக்கிளில் வலம் வரும் பிரபல நடிகை….!!

பாலிவுட் முன்னணி நடிகை மும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் சென்று உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் மும்பை வீதிகளில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பையின் பிரதான சாலையில் கருப்பு நிற டீசர்ட், மாஸ்க், கிளவுஸ், தொப்பி அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

எல்லாருக்கும் நன்றி…. உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்…. அப்பா வீட்டில்…. நான் மருத்துவமனையில் …!!

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததை அடுத்து வீடு திரும்பிய நிலையில் வீட்டிலேயும் தனிமையில் இருக்கப்போவதாக கூறியுள்ளார்.  இந்தியத் திரையுலகில் ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஜூலை 11-ம் தேதி அன்று கொரோனா தொற்று  உறுதியானதைத் அடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்… குவியும் பாராட்டு…!!

பிரபல நடிகர் சோனு சூட் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தனது பொறுப்பில் தத்தெடுத்து பாராட்டுகளை குவித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் நடிகர் சோனு சூட் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, காய்கறி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தது போன்ற செயல்களால் பாராட்டுகளை குவித்தவர். தற்சமயம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது மூலம் இன்னும் மேம்பட்டு உள்ளார். ராஜம் கர்ணன் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் ஆந்திர […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் மரணத்தின் மர்மம்…. “நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள்” பிரதமரிடம் வேண்டுகோள் வைத்த சகோதரி…!

சுஷாந்த் சிங் மரணம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பிரதமருக்கு சுஷாந்த் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்த பட வாய்ப்புகளை தட்டிப் பறித்ததுமே இவரின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்திற்கு  மனரீதியாக தொல்லை தந்ததும், அவரின் கிரிடிட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிறந்த நாளை முன்னிட்டு 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு… நடிகர் சோனு சூட்…!!

பிரபல நடிகர்  தனது பிறந்தநாளை முன்னிட்டு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி  கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் வில்லனாகவும், துணை வேடங்களிலும் நடித்து அசத்தியவர் சோனு சூட். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல, களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். அது […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய்… இதயம் கரைந்து விட்டதாக உருக்கம்..!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யாரய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நன்றி கலந்த உருக்கமான பதிவு ஒன்றை ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ராக்கியை மிரட்டவரும் ‘அதீரா’..!!

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் ‘அதீரா’ கதாப்பாத்திரத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதை அடுத்து அந்தப் போஸ்டர் தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கன்னடத் திரையுலகில் 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்’. இப்படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

இதனை இழந்தால் ஒருபோதும் திரும்பப் பெறமுடியாது…. அமைதியாக இருங்கள் – ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள்..!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களிடம் அமைதியாக இருங்கள் இதையும் கடந்து செல்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்திப் படவுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும், வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹாஸ்டேக்செய்து ரசிகர்கள் கொந்தளித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்கள் ஆண்மான்…. அரிய வகை மான்…. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பதிவிட்ட வைரமுத்து…!!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இருக்கு ஆதரவாக வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் தடுக்க வேலை செய்கிறது’ என இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11 வருடத்தில் 33 இந்தி படங்களை இசையமைத்து ஆஸ்கர் விருது பெறுவதற்கு முன்புவரை வட இந்தியாவில் கொடிகட்டி பறந்தார். ஆஸ்கர் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. பாலிவுட்டில் அவரது பட வாய்ப்புகளை தடுக்க சதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

இரவு வீட்டு அருகே நடந்த சம்பவம்…. கோபம் கொண்ட அமிதாப்பச்சன் மனைவி….. போலீசில் புகார்….!!

அமிதாபச்சன் மனைவி இரவு தனது வீட்டருகே நடந்த சம்பவத்தினால் கோபம் கொண்டு காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார். மும்பையில் ஜிகு பகுதியில் இருக்கும் ஜல்சா பங்களாவில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன், இரவு சுமார் 11:30 மணியளவில் இந்த பங்களாவிற்கு அருகே அதிக இரைச்சலுடன் பைக்குகள் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பைக் இரைச்சல்கள் காதை அடைந்ததால் எரிச்சலடைந்த அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

முதல் நாள் நடுங்கி போனேன்…. சல்மான் ‘டீ-சர்ட்’ கொடுத்தார்… மனம் திறந்த மேகா ஆகாஷ் …!!

சல்மான்கானுடன்  ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து  பகிர்ந்துள்ளார். மேகா ஆகாஷ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “ஒரு பக்க கதை” இது இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தால் அவரின் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சிம்பு-தனுஷ் ஆகியோருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷீக்கு இப்பொழுது பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக “ராதே” என்னும்  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“80 வயது ஆனாலும் நான் நடிப்பேன்” நடிக்கும்போது இவர்கள் என்னுடன் இருக்க வேண்டும் – எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் தனக்கு 80 வயது ஆனாலும் ஒரு நடிகையாக தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்துள்ளார் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். இவர் சினிமாவின் 8 வருட வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இது குறிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்: என்னை நடிகையாகவும், தனிப்பட்ட முறையிலும் வளர்த்து ஆளாக்கிய இடம் இந்தியா. இந்தியாவில் இருந்த நாட்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘Suicide or Murder’… அச்சு அசலாக மீண்டும் வருகிறார் சுஷாந்த்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயிலாக இருக்கும் நபரை  வைத்து புதிய திரைப்படம் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள  தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுஷாந்தின் தற்கொலைக்கு வெவ்வேறு  காரணங்கள் கூறி வந்தாலும், மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கை வரலாறை சிலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா பரவல் அச்சம்… பங்களாவை கவரால் மூடிய ஷாருக்…!!

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிரபல நடிகர் ஷாருக்கான் தனது பங்களாவை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடியுள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைப்பதாக இல்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், திரையுலகம் முழுவதும் கொரோனா பயத்தில் மூழ்கி இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்காக, நடிகர் ஷாருக்கான் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் கூறியதாக பொய்யான செய்தி… நிருபர் கைது செய்யப்பட்டு விட்டார் – நடிகை ஸ்வஸ்திகா

சுஷாந்த் தற்கொலை குறித்து பரவிய செய்தி பொய்யானது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தன்னை மிரட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். “பாதாள் லோக்” போன்ற பல்வேறு வெப் சீரிஸ் மற்றும் பல திரைப்படங்களில்  நடித்தவர் சுவஸ்திகா முகர்ஜி. இந்த மாதம் வெளியாக உள்ள “தில் பெச்சாரா” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஷாந்த் மரணத்தைக் குறிப்பிட்டு ‘இப்பொழுதெல்லாம் தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று ஸ்வஸ்திகா […]

Categories
இந்திய சினிமா சினிமா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் வாழ்க்கை… விரைவில் படமாக வெளிவரும்- தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி ..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினுடைய அரசியல் வாழ்க்கை பற்றிய திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வருவதாக ஆங்கில பட தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெறிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில்  தரிசனத்திற்கு பின் கோவிலுக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசிய போது, “பல நாட்களுக்குப்பின் ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னால் முடிந்த உதவி இது” 25,000 முகக்கவசம் வழங்கிய சோனு சூட் … பாராட்டிய அமைச்சர் ..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு நடிகர் சோனு சூட் 25,000 முகக் கவசங்கள் வழங்கியதை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரியல் ஹீரோவாக இருக்கும் ரீல் வில்லன் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலமாக திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினர்களிடைய பாராட்டுக்களை பெற்று வருகிறார். புலம்பெயர்ந்தோருக்கு உதவிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் புத்தகம் ஒன்றை எழுத உள்ளதாக, சோனுசூட் சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் சுஷாந்தின் காதலி ரியா… “சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்க… அமித்ஷாவுக்கு கைகூப்பி வேண்டுகோள்..!!

சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரின் காதலி உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் சிங் இறப்பிற்கு காரணம் வாரிசு நடிகர்கள், வாரிசு நடிகர்களை உருவாக்கும் இயக்குனர்கள் இவர்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான்கு அரசு பள்ளிகளை தத்தெடுத்த சுதீப்…. “REAL HERO” குவியும் பாராட்டுக்கள்…!!

பிரபல நடிகரான சுதீப் கர்நாடக மாநிலத்தில் 4 அரசுப்பள்ளிகளை தத்து எடுத்தது பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். அதன்பின் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் பாலிவுட்டில் தபாங் என்ற படத்தில் சல்மான் கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சுதீப் கர்நாடகாவின் சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள நான்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அமிதாப் குடும்பம் குணமடைய வேண்டும்” சிறப்பு யாகம் நடத்தும் ரசிகர்கள்…!!

அமிதாப் பச்சனின் குடும்பம் தொற்றிலிருந்து குணமடைந்து வரும் வரை சிறப்பு யாகம் நடத்தப்போவதாக அமிதாப் பச்சன் ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது  இந்தி திரையுலக நச்சத்திரமான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என 4 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயாபாச்சனுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையின் நானாவிதி மருத்துவமனையில் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மிதமான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா

உடல் முழுவதும் சேறு…. “விவசாயிகளை மதியுங்கள்” சல்மான் கானின் வைரல் பதிவு…!!

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் கொரோனா முடக்கத்தின் போதும் உலகில் உள்ள பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு பொதுமுடக்கத்தால்  உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு தனது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் உணவளித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊர் செல்ல முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இவர் உதவி செய்துள்ளார். தற்போது சல்மான் கான் பாட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

அல்லு அர்ஜுன் படத்தை மறுத்த விஜய் சேதுபதி… காரணம் இதுதான்…!!

அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்த தற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அல்லு அர்ஜுன். இவர் அடுத்ததாக சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தில் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். இப்படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.     இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

நர்சாக மாறிய பிரபல நடிகை…. குவியும் பாராட்டுக்கள்….!!

பிரபல நடிகை நர்சாக மாறி மக்களுக்கு சேவை செய்வதால் ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல முன்னணி பிரபலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பல உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் ஹிந்தியில் பிரபல நடிகையான ஷிகா, நர்ஸாக பணியாற்றி வருகிறார். 1000 பேருக்கு மேல் மருத்துவ உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் நர்சாக பணிபுரிவதற்கான ஊதியம் ஏதும் பெருவதில்லையாம். இச்செய்தி அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நர்சிங் படித்துள்ள ஷிகா இச்சமயத்தில் மக்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல முன்னணி நடிகை ஏற்றுக்கொண்ட சேலஞ்ச்- இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்…!

பிரபல முன்னணி நடிகை கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகள் நட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பிரதமர் மோடி அவர்களால் ஈர்க்கப்பட்டு மரம் நடும் “கிரீன் இந்தியா சேலஞ்ச்” என்பதை தெலுங்கானா எம்.பி சந்தோஷ் குமார் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். பிறகு நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சிலர்  இத்திட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று நடிகர் நாகார்ஜுனா தனது மருமகள் சமந்தாவுடன் மரக்கன்று நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுமருமகள் சமந்தாவிற்கு சவால் விடுத்துள்ளார்.   […]

Categories
இந்திய சினிமா சினிமா

“முக கவசத்துடன் ராதே ஷ்யாம்” வெளியான பிரபாஸ் பட போஸ்டர்… அசாம் போலீஸ் கைவண்ணம்….!!

ராதேஷ்யாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாங்கள் தற்போது உள்ள நிலையை சுட்டிக்காட்டி அந்த படத்தின் போஸ்ட்டரை போட்டோஷாப் செய்து பதிவிட்ட அசாம் போலீஸ். சாஹோ படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படத்திற்கு ராதே ஷ்யாம் என தலைப்பு வைக்கப்பட்டு நேற்று அதன் முதல் பார்வை போஸ்டர்  வெளிவந்தது. இந்த போஸ்டரில் பிரபாஸும் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவும் நெருங்கி நின்று முகத்தோடு முகம் வைத்திருப்பது போல உள்ளது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சுஷாந்த் சிங் மரணம்” ஊர் மக்கள் கோரிக்கை… உடனடியாக நிறைவேற்றிய மேயர்….!!

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அவரது ஊரில் இருக்கும் சாலை ஒன்றிருக்கும் ரவுண்டானா ஒன்றிருக்கும் அவர் பெயர் சூட்டப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின்  மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் தற்கொலை எண்ணத்திற்கு காரணம் வாரிசு நடிகர்கள், மற்றும் வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இவர்கள் கொடுத்த மன உளைச்சலில் […]

Categories
இந்திய சினிமா கொரோனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பருக்கு கொரோனா தொற்று- தொலைபேசியில் நலம் விசாரித்தார்…!

அமிதாப்பச்சனுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார். இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பெருமளவு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் மும்பையில் உள்ள ஞானவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பலரை சிரிக்க வைத்த காமெடி நடிகர் மரணம்…சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்…!

400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகரின் மரணம் திரைஉலகத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா  தொற்று இல்லாமல் உடல்நலக்குறைவால் பலர் இறந்துள்ளனர். அண்மையில் நடிகர் ரிஷி கபூர், இம்ரான் கான் என சினிமா பிரபலங்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் ஹிந்தியில் 400க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ஜக்தீப். இவர் மும்பை பந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று உடல்நலக்குறைவால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்” இப்படி எழுத்தாதிங்க – சாடிய தமிழ் நடிகை

கிசுகிசுவால் பல மற்ற முடியாத பாதிப்புகள் ஏற்படும் என நடிகை வேதிகா சாடியுள்ளார். தமிழில் ‘மதராஸி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன்பின் முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தி பாடி’ என்ற படத்தின் மூலம் இந்தியில் இம்ரான் ஹாஸ்மியுடன் நடித்து அறிமுகமானார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கிசுகிசு செய்திகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பட வாய்ப்புகளை இழந்தேன்…. இவர்களும் நீங்களும் தான் காரணம்…. குற்றம் சுமத்திய டாப்சி ……!!

பாலிவுட்டில் தனது பட வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்: ஆடுகளம் படத்தில் அறிமுக நடிகையாக டாப்சி, தனுசுடன் ஜோடியாக நடித்தார். பிறகு, அவர் வந்தான் வென்றான், வைராஜா வை,காஞ்சனா-3, கேம் ஓவர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வந்தார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைத்துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களால் புதிய பட ஒப்பந்தம் கிடைக்காமல் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து டாப்ஸி […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனவால் வறுமை பிடியில் நடிகை ….. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார் …!!

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்ததால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை நாள்தோரும் சந்தித்து வருகிறோம். கேரளாவில் உள்ள மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்வாதாரத்தையும் இந்த கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. நடிகை மஞ்சுவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்கள் தான் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அவரின் சேமிப்பையும் மற்றும் கேரள மக்களின் கலைக்கழகத்திடமும் கடன் வாங்கி ஒரு ஆட்டோவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வைரலான வீடியோவிற்கு” பதிலடி கொடுத்த நடிகை ரகுல் பிரீத் சிங்!

ரகுல் பிரீத் சிங்  தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார்.   உரடங்கு சமயத்தில் உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தும் தனது ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அதுமட்டும் அல்ல ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர், இதனால் பல லைக்குகளை பெற்றுவந்தார். இதில் ஆண்களை விட பெண்களின் லைக்குகள் தான் அதிகம், என்று அவர் கூறுகிறார். இந்நிலையில் அண்மையில்  மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜிம் இல்லன்னா என்ன?… “எனக்கு குழந்தை இருக்கு”… வொர்க்கவுட் செய்யும் பிரியங்கா.!

ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் காணொளிகளை பதிவிட்டு வருகிறார் பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகைருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர்  முன்னாள் உலக அழகியும் பிரபல ஹிந்தி நடிகையுமான பிரியங்கா சோப்ரா. கொரோனா  காரணமாக அனைவரும் வீட்டிலேயே நேரத்தை போக்கி வருகின்றனர். உலகமே சோர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் உலகம் முழுவதிலும் இருக்கும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பதிவுகளின் மூலம் உத்வேகம் அளித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

உங்கள சந்திக்கல…! “இது என் சொந்த இழப்பு”…. சாய்பல்லவி உருக்கம்..!!

நடிகை சாய் பழல்வி, இர்பான்கானின் மறைவிற்கு, நான் அவரை சந்தித்தது இல்லை, ஆனாலும் சொந்த இழப்பு போன்று உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த பிரபலமான நடிகர் தான் இர்பான்கான். அவர் நேற்று அவரின் உடல்நிலை மோசமானது,  தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருடைய வயது 53 ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே புற்றுநோயுடன் போராடி கொண்டிருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்நோய்க்கு லண்டனில் சிகிக்சை பெற்று இந்தியா […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இளம் இயக்குனர் வீட்டில் குவா குவா சத்தம்”…ஒன்றல்ல ட்விங்ஸ்… உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

நடிகர் துல்கர் சல்மான் படத்தின் அறிமுக இயக்குனருக்கு அழகு தெய்வங்களாக இரட்டை குழந்தை பிறந்துள்ளது. சினிமாவில் இருக்கும் திரை நட்சத்திரங்களின் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் பலரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு பற்றி பார்ப்போம் இப்பொழுது… மலையாள சினிமாவில் பிரபலமான ஸ்டாராக விளங்கக்கூடியவர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான். தந்தையை போலவே இவரும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர், இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பினேன்”… இப்படி ஆகிவிட்டதே – கமல் இரங்கல்…!!

நடிகர் இர்பான்கான் மறைவிற்கு, நடிகர் கமல்ஹாசன் ‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ என்று கூறி இரங்கல்  தெரிவித்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி கொண்டிருந்தவர் பிரபலமான நடிகர் தான் இர்பான் கான். இவர் நேற்று உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மும்பையில் இருக்கும் கோகிலா பென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருந்த பெருங்குடல் தொற்று பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அந்த சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை, இதனால் இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அதிக பாலோவர்ஸ் இல்லையே”…ரசிகர் கேட்ட கேள்வி…விளக்கம் அளித்த பிரபல நடிகர்..!!

நடிகர் அமிதாப்பச்சனிடம், இன்ஸ்டாகிராமில் ஏன் நீங்கள் அதிகமான பாலோயர்களை பெறவில்லை? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்தார். கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரை அரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைத்து திரை நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்துள்ளதால் அவர்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, […]

Categories
இந்திய சினிமா சினிமா

“முதியவரின் செயலால் நான் அழுதேன்”…டைட்டானிக் காதல் புறா….!!

முதியவரின் செயல் என்னை அழவைத்து விட்டது என்று  டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார். அன்றும், இன்றும், என்றும் என காலங்கள் பல கடந்த போதிலும், அழிக்க முடியாத காதல் காவியமாய் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக பேசப்படும் படம் டைட்டானிக். இந்த படத்தில் ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்கள் பலரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது. அதனால்தான் என்னவோ இன்றும் யாரும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த படத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு வருத்தப்பட்டவர்களை விட. […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம ஐடியா…..! “ரூ.15,000, 1KG கோதுமை”.. அசத்திய அமீர்கான்..!!

கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் பல ஏழை பாமரமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் என பல இந்தி நடிகர்-நடிகைகள் ஆவர். இந்நிலையில் இந்தி நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நான் தரேன்….! “பிளாஸ்மாவை கொடுக்க முன்வந்த கனிகா கபூர்”… ரசிகர்கள் பெருமிதம்..!!

கொரோனாவில் இருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் தன்னுடைய பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார்.  உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது. இன்னும் அதனுடைய ஆட்டம் முடிந்த பாடில்லை. கொரோனோவால் பல லட்சம் மக்கள் பாதித்துள்ளனர். அதுபோல பாலிவுட் பாடகி கனிகா கபூரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தற்போது குணமடைந்துள்ளார். அதனால் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். இதனால் கொரோனாவால் பதிப்படைந்தவர்களுக்கு  பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரூ. 2,00,00,0,00…! ” மும்பை போலீசுக்கு அதிர்ஷ்டம்”….அள்ளி கொடுத்த அக்‌ஷய்குமார்..!!

கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி வழங்கி உதவி செய்துள்ளார். உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.  கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். ஊரடங்கால் வருமானம் இன்றி ஒரு வேளை உணவிற்கு கூட இன்றி தவித்து […]

Categories

Tech |