Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள மலையாள பிரபல நடிகை… ‘நவரசா’ படம் குறித்து வெளியான தகவல்…!!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நடித்துள்ளாராம். தமிழ் திரையுலகில் பிரபலமான 9 இயக்குனர்கள் இணைந்து நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்குகின்றனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்க்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நான் சில்க் ஸ்மிதாகாருவாக எந்த பயோப்பிக்கிலும் நடிக்கவில்லை’… வதந்திகளுக்கு விளக்கமளித்து அனசுயா ட்வீட்..!!

நடிகை சில்க் ஸ்மிதா பயோபிக்கில் நடிகை அனசுயா நடிக்கயிருப்பதாக பரவிய தகவலுக்கு ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா தமிழ், இந்தி ,தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 450 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் வாழ்க்கை வரலாறு ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கப்பட்டது. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை காலை மெகா அறிவிப்பை வெளியிடப்போகும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்… ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு…!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் ‘தளபதி 65’ திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் நாளை காலை 11.07 மணிக்கு மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 🚨 Mega Announcement coming up!🚨Can you guess […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தி ரீமேக் பட வாய்ப்பை இழந்த நடிகர் விஜய்சேதுபதி… காரணம் என்ன?…!!

ஹாலிவுட் படமான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் சேதுபதி இழந்ததாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் தனக்கு வந்த ஹிந்தி ரீமேக் பட வாய்ப்பை விஜய் சேதுபதி இழந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹாலிவுட்டில் பிரபலமான ‘ பாரஸ்ட் காம்ப் ‘ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் தயாராகவுள்ளது. இந்தப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் யாரையும் காதலிக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்…!!

நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்,விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பரவிய வதந்திக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ ‘ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். அடுத்ததாக மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திலும் நடித்து அசத்தினார். தற்போது இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தை நிஹாரிகாவை தூக்கி வைத்துள்ள சிரஞ்சீவி… வெளியான புகைப்படம் இணையத்தில் வைரல்…!!

நடிகர் சிரஞ்சீவி தன் தம்பி மகளான நிஹாரிகாவை குழந்தையாக இருக்கும் போது கையில் தூக்கி வைத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி . தற்போது  இவர் நடிப்பில் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஆரச்சர்யா என்ற திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவுக்கு உதய்ப்பூரில் நாளை  திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் நிஹாரிகாவுக்கு நடிகர் சிரஞ்சீவி சீர்வரிசையாக 1. 5 கோடி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது… கே.ஜி.எஃப் -2 குறித்து இயக்குனர் ட்வீட் …!!

கேஜிஎப் -2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018 இறுதியில் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் யாஷ்  கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப்-2 என்ற பெயரில் தயாராகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொழிலதிபருடன் இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி.‌.. இணையத்தில் வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிரபல பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல பாடகி சுனிதா தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். தமிழிலும் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் சில பாடல்கள் பாடியுள்ளார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவருக்கு 19 வயதிலேயே திருமணம் நடைபெற்று ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஸ்ரேயாவும் பாடகியாக உள்ளார். கடந்த சில மாதங்களாகவே பாடகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற ஷர்ட் நீல நிற ஸ்கர்ட்… ‘நிழல்’ பட நயன்தாராவின் அசத்தல் புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்..!!

‘நிழல்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு  நிவின் பாலினுக்கு ஜோடியாக ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது இயக்குனர் அப்பு என்.பட்டாத்திரி இயக்கும் ‘நிழல்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கிறார். #Nizhal clicks […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பல மாதங்களுக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகர்… ‘டீ’க்கடையில் நண்பர்களுடன் அரட்டை…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே இருந்த பிரபல நடிகர் மம்முட்டி பல மாதங்களுக்கு பின் வெளியே வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதை கடைபிடித்த பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பல மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார் . தற்போது 275 நாட்களுக்குப் பின் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் ‌. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் பிரபாஸ் … அடுத்தடுத்த படங்களுக்கு கோடிக்கணக்கில் முதலீடு…!!

பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் . அடுத்ததாக இவர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சஹோ’. இதையடுத்து நடிகர் பிரபாஸின் -20வது படத்தை கேகே ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.’ராதே ஷ்யாம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தபடத்தை சஹோ படத்தை தயாரித்த யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ … மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு… வெளியான தகவல்கள்..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஜெயராம், லால், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகைகள் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நந்தினி, மந்தாகினிதேவி என இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராணுவ வீரராக நடிக்கும் துல்கர் சல்மான்… படத்தில் இரண்டு பிரபல கதாநாயகிகள்… யார் தெரியுமா?…!!

தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் உருவாகும் துல்கர் சல்மானின் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ஹனு ராஹ்வபுடி இயக்குகிறார். 1960 களில் நடக்கும் போர் பற்றிய கதையில் ராம் என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ள நிலையில் தற்போது இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரு மொழிகளில் தயாராகும் ‘மஹா சமுத்திரம்’… நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் அதிதி ராவ்… வெளியான தகவல்கள்..!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் மணிரத்தினம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா நினைவு நாளில் கங்கனா வெளியிட்ட ‘தலைவி’ புகைப்படம் … இணையத்தில் வைரல்…!!

நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் புகைப்படங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம்  ஆண்டு நினைவு தினமான இன்று ‘தலைவி’ திரைப்படத்தின் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். On the death anniversary of Jaya Amma, sharing some working stills […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காரில் கணவருடன் சனா கான் எடுத்த செல்ஃபி… இணையத்தில் வைரல்…!!

நடிகை சனாகான் தன் கணவருடன் காரில் அமர்ந்தவாறு எடுத்துள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை சனாகான் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் . இதையடுத்து தம்பிக்கு இந்த ஊரு ,ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை, பயணம், ஈ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக அளவு பிரபலமடைந்தார். பின்னர் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த சனா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘நிழல்’… படப்பிடிப்பு நிறைவு… படக்குழுவினர் மகிழ்ச்சி…!!

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘நிழல்’ என்ற மலையாள திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது அட்டகாசமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி ,ஊர்வசி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர் . தற்போது நடிகை  நயன்தாரா ‘நிழல்’ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் எப்போ தெரியுமா? … வெளியான தகவல்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப்- 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் தயாரான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது ‌. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ்ஷின்  அதிரடியான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு அனைத்து மொழிகளிலும் வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கேஜிஎப் சாப்டர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தமிழில் டப் செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் படம்… சன் டிவியில் ஒளிபரப்பு…!!

தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜுனின்  திரைப்படம்  தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அலவைகுண்டபுரமுலோ’ . இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக  நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் தெலுங்கில் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம் … டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!

நடிகர் பிரபாஸின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனான பிரபாஸின் அடுத்த திரைப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனம் இந்திய அளவில் வித்தியாசமான களங்கள், பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வெற்றிபெற்ற தயாரிப்பு நிறுவனமாகும். இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கே.ஜி.எஃப் படத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளார் . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘சலார்’ என்ற டைட்டிலுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரசவ காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்த அனுஷ்கா ஷர்மா … வைரலாகும் புகைப்படம் …!!

நடிகை அனுஷ்கா ஷர்மா பேறுகாலத்தில் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தற்போது நடிகை அனுஷ்கா கர்ப்பமாக உள்ளார் . இந்நிலையில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனுஷ்கா சர்மா தலைகீழாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் ‘கோலமாவு கோகிலா’ … நயன்தாராவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?…!!

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் நயன்தாரா கதாபாத்திரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி… செல்ல மறுத்த பாலிவுட் நடிகை… படப்பிடிப்புக்கு தடை விதித்ததால் பரபரப்பு…!!!

நடிகை வித்யா பாலன் மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தற்போது ‘ஷெர்னி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யாபாலன் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை வித்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சினிமா அமைப்புக்கு தூதராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்… ‘பாப்டா’வுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி..!!

இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமான் இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சினிமா துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு ஒன்றை பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு  சினிமா , தொலைக்காட்சித் துறையில் திறமையான 5 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியா சார்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் அஜித் படங்களுக்கு வரவேற்பு… பழைய படங்களை டப் செய்து வெளியிட முடிவு …!!

நடிகர் அஜித்தின் பழைய படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட பாலிவுட் தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவர் ஹிந்தியில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘அசோகா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகை ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் உருவானார்கள் . இதனால் அவரது படங்கள் தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்… சிறப்பு தோற்றத்தில் நடிக்க முழு சம்பளம் …!!

ரீமேக் படத்தின்  சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி கிடையாது ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ஹீரோயின் இவர்தான்… வெளியான தகவல்…!!

நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ் ‘திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானாவர். இதையடுத்து இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் தமிழ், மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் சுமார் ரூ .500 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிகு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை இவர்தான்… வெளியான தகவல்..!!

ஹிந்தியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிகு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 18 வருடங்களாக நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் கர்ஜனை, பரமபத விளையாட்டு, 1818, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர் ஆகிய திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல கன்னட நடிகையின் கார் விபத்து … மோதிய காரிலிருந்த மூவர் பரிதாபமாக பலி…!!

பிரபல கன்னட நடிகைக்கு சொந்தமான கார் மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகியுள்ளனர். பல திரைப்படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ கர்நாடக மாநிலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலம் உள்ள உப்பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் இந்த காரில் நடிகை உமாஸ்ரீ […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மதுபான நிறுவனத்திடமிருந்து வந்த வாய்ப்பு… விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை…!!

நடிகை லாவண்யா அதிக சம்பளம் தருவதாக கூறியும் மதுபான  விளம்பரத்தில் நடிக்க  மறுத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை லாவண்யா பிரம்மன் மற்றும் மாயவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து  இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். மேலும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை லாவண்யாவிற்கு மதுபான நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் விளம்பரத்தில் நடிக்க லாவண்யா மறுத்துள்ளார். அதிக சம்பளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குட்டித் தூக்கம் போட்ட கீர்த்தி… செல்பி எடுத்த ஹீரோ… வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தூங்கும்போது பிரபல ஹீரோ செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அசத்தியவர். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும்  கீர்த்தி சுரேஷ் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் ‘சாணி காயிதம்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் நடிகர் நிதினுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நடிக்கத் தகுதி இல்லாத நடிகை’ … விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி …!!

சமூக வலைத்தள பக்கத்தில் ‘நடிக்க தகுதி இல்லாத நடிகை ‘என விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி. தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர். தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து  இவர் துணிச்சலாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும் போதைப்பொருள் விவகாரம், வாரிசு அரசியல் ஆகியவற்றை விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்க்கு எதிர்ப்பு தெரிவித்தார் . இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

4 கோடி பார்வையாளர்களை கடந்த ‘மாஸ்டர்’ டீசர் …!!

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூட்யூபில் 4 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஹன்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாஸ் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த டீசர் யூட்யூபில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய திரைப்பட டீசர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது இந்த டீசர் யூட்யூப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் வில்லனாக இருப்பதால் தான் நான் நாயகியாக இருக்கிறேன்’… நடிகை கங்கனா வெளியிட்ட வீடியோ…!!

ஹைதராபாத்தில் நடைபெறும் தலைவி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ திரைப்படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மும்பை பாந்த்ராவின் பாலிஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியை சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு ஜோடியாக இந்த நடிகையா? … ‘தளபதி 65’ குறித்து வெளியான தகவல்…!!

தளபதி விஜயின் 65வது படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து தளபதி 65 திரைப் படத்தை இயக்கப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர்  ஏ.ஆர். முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் விஜய்யின் 65வது திரைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப் 2’ குறித்து வெளியான தகவல்கள்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

நடிகர் யாஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் 2018 இறுதியில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தாமதமாகியிருந்தது . பின் ஆகஸ்ட் 26ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சினிமாவில் சாதனை செய்த ‘புட்ட பொம்மா’ பாடல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படத்தின் பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாகவும் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகவும் நடித்திருந்த ‘அல வைகுந்தபூர்ரமுலூ’ திரைப்படம் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது . இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘புட்டபொம்மா’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது . இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் 2 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் வீடியோ பாடல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் களத்தில் அசத்தப் போகும் ‘ஜல்லிக்கட்டு’… இந்தியா சார்பில் போட்டியிட தேர்வான மலையாள படம்…!!

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா  சார்பில் போட்டியிட மலையாளத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்கள் சார்பில் போட்டியிட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘மிருகங்களை விட மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கிறது’ என இந்த திரைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லாவுக்காக திருமணம் செய்து கொண்டுள்ளோம்… திடீர் திருமணம் குறித்து சனாகான் விளக்கம்…!!

நடிகை சனா கான் தனது திடீர் திருமணத்திற்கான விளக்கத்தை திருமண புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சனாகான் சிம்புவின் ‘சிலம்பாட்டம் ‘ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் ஆயிரம் விளக்கு, தம்பிக்கு இந்த ஊரு, ஈ ,பயணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சனா கான் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமானார். சமீபத்தில் இவர் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.மேலும்  என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க மனித குலத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்… டுவிட்டரில் பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ‘ஆராட்டு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் விக்ரம் வேதா, இவன் தந்திரன், கே13, ரிச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் துணிச்சலான பெண்ணாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் ஹிந்தி, கன்னடம் என பல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹிந்தி நடிகர் அசீஷ் ராய் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர் …!!

பிரபல ஹிந்தி நடிகர் அசீஷ் ராய் கிட்னி பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். ஹிந்தியில் வெளியான  ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ ‘ என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அசீஷ் ராய். இவர் ஹோம் டெலிவரி, பர்கா, ராஜா நட்வாரியல், மேரே பஹேலா பஹேலா பியார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் கடந்த மே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறப்பதற்கான வாய்ப்பு 30% இருந்தது… உடல்நல பாதிப்பு பற்றி உருக்கமாக பேசிய ராணா…!!

பிரபல நடிகர் ராணா தனக்கிருந்த உடல்நல பாதிப்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு திரையுலகில் ‘லீடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின்  மூலம் அதிகளவு பிரபலமடைந்தார். தமிழில் இவர் இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது காதலியான மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபரை திருமணம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் மிகச்சிறந்தவர்கள்… நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா ட்வீட் …!!

கூகுளின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாகிய ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக்  பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த’ கீதாகோவிந்தம்’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக மகேஷ்பாபுவுடன்  இவர் நடித்த ‘சரிலேரு நீகெவ்வரு’ திரைப்படம் ஹிட்டானது . இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகையாக ராஷ்மிகா பெயர் தேர்வாகியுள்ளது . இதனால் கூகுள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பண மாலையணிந்த பிரியா ஆனந்த் … வைரலாகும் புகைப்படம் …!!

நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ள ஹிந்தி வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை பிரியா ஆனந்த் ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது நடிகை பிரியா ஆனந்த் ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரிந்து சென்ற மனைவி… சினிமா வாழ்க்கையும் போய்விட்டது… விரக்தியில் இம்ரான்கான் எடுத்த முடிவு…!!

பிரபல இந்தி நடிகர் இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் இம்ரான் கான் ‘ஜனே து யா ஜனே நா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவர்  ஐ ஹேட் லவ் ஸ்டோரி, ஹிட்நேப், ஹோரி தேரே பியார் மெய்ன், டெல்லி பெல்லி, கட்டி பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில்  நடித்திருந்தார்.   முதல் படத்திற்குப் பிறகு இம்ரான் கான் நடிப்பில் வெளியான அனைத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை சனாகானின் திடீர் திருமணம்… வைரலாகும் திருமண வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பாலிவுட் நடிகை சனாகான் சூரத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை சனாகான் ஈ, சிலம்பாட்டம், பயணம், தம்பிக்கு இந்த ஊரு, ஒரு நடிகையின் கதை ,ஆயிரம் விளக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் இவர்மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தலைவி” இறுதிகட்ட படப்பிடிப்பு… ஹைதராபாத் கிளம்பிய கங்கனா… புகைப்படத்துடன் போட்ட ட்வீட் …!!

நடிகை கங்கனா ‘தலைவி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்க்கு கிளம்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது கங்கனா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். It’s never easy to say bye but time to […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சூர்யா படம் பாத்தேன்… எப்படி இருந்துச்சு தெரியுமா ? நடிகர் விஜய் போட்ட ட்விட் …!!

நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை  நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி…. கொரோனாவால் காலமானார்…!!

பழம்பெரும் நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல வங்காள நடிகரான சவுமித்ரா சாட்டர்ஜி(85) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகின் முன்னோடி இயக்குனரான சத்யஜித்ரே அவர்களுடைய ஏராளமான படங்களில் சவுமித்ரா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் பத்மபூஷன் மற்றும் தாதா சாகிப் பால்கே உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த அறுபது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான படங்களில் இவர் நடித்துள்ள இவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகரின் மகன்…. திடீர் மரணம்…. கண்ணீருடன் முகநூல் பதிவு…!!

பிரபல நடிகரின் மகன் தற்போது மரணமடைந்துள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹிந்தி காமெடி நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரபல நடிகரான ராஜீவ் நிகமின் மகன் தற்போது மரணமடைந்துள்ளார். நேற்றைய தினம் ராஜீவ்க்கு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தற்போது அவருடைய மகன் இறந்துள்ள செய்தியை […]

Categories

Tech |