மனநலம் என்பது மிகவும் சாதாரணமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. இந்திய குடும்பங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இதை தான் பார்க்கிறேன். மனநலம் என்று வரும்போது எதுவும் நடக்காதது போல் தலையை தூக்கி நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்வது மோசமான நடத்தை. தாங்கள் எந்தவகையான பிரச்சினையில் இருக்கிறோம் என்பது குறித்தே பலருக்கும் புரிவதில்லை. ஆக்கபூர்வமோ, அழுத்தமோ திரைத்துறையில் இரண்டுமே அதிகம் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
