Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய வீரர்களின் லன்ச் மெனுவை பாத்தீங்களா’ ….! இணையத்தில் டிரெண்டாகும் லன்ச் மெனு ….!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மதிய உணவு பட்டியல் புகைப்படம்  தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் : முக்கிய வீரர் இடம்பெறவில்லை …. இந்திய அணியின் உத்தேச பட்டியல் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிநாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது .இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.இதனால் இப்போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.அதே போல் இந்திய அணியிடம் தோல்வி அடையக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“711 விக்கெட் சாதாரண விஷயம் அல்ல” ….! ‘ஹர்பஜன் சிங்கிற்கு கோலி, டிராவிட் புகழாரம்’ ….!!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  அனைத்து  வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து  ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார் இந்த நிலையில் அவருக்கு விடைதரும் வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வீடியோ ஒன்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் : 5 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்பு ….! கே.எல். ராகுல் பேச்சு ….!!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாளை தொடங்குகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல். ராகுல் நேற்று பேட்டியில் கூறும்போது,” கடைசியாக இங்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டு விளையாடிய போட்டியை விட இம்முறை இன்னும் சிறப்பாக தயாராகியுள்ளோம். நானும் மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கத்தை தருவோம் என நம்புகிறேன். அதேசமயம் முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலானது ….! புஜாரா பேட்டி ….!!!

தென் அப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது .இதுகுறித்து இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது ,”தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : டெஸ்ட் கிரிக்கெட்டில் மெகா சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி ….! விவரம் இதோ ….!!!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில்  விளையாடுகிறது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் குவித்துள்ளார் .இதில் 27 சதங்கள் மற்றும்  27 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

சர்வதேச ஹாக்கி : தரவரிசை பட்டியலில் ….! 3-வது இடத்தில் இந்திய அணி ….!!!

சர்வதேச ஹாக்கி  தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி  அணி 9-வது இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது . இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான் – தென் கொரியா அணிகள் மோதின .இதில் 4-2  என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது . இந்நிலையில் சர்வதேச ஹாக்கி சங்கம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்….!!!

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது ஒமைக்ரான்  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்குமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடம்பிடிக்கும் பாண்டியா….! கடும் கோபத்தில் பிசிசிஐ …. காரணம் என்ன ….?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து போட்டியில் விளையாடாமல் இருப்பதால் பாண்டியா மீது பிசிசிஐ  கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் முன்பு போல் ஹர்டிக் பண்டியா விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டது .இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான பாண்டியா தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் எனஇரண்டிலும்  முழு ஃபார்முக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் …. அணியில் விகாரி இடம்பெறுவாரா ….?

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற  26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற  26-ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது . அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாகிறாரா கே.எல்.ராகுல்….? கசிந்த முக்கிய தகவல் ….!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர் . ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :பயிற்சியை தொடங்கியது இந்திய அணி ….! பிசிசிஐ வெளியிட்ட வீடியோ …!!!

தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை  பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம்  தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில்  சென்றடைந்தனர் . இந்நிலையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் …..! தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தது இந்திய அணி …..!!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : “வெற்றியுடன் நாடு திரும்புவோம்” …..! விராட் கோலி அதிரடி பேச்சு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும்  இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது .இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலியும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் : இந்திய அணி வீரர்கள் 3 நாட்கள் தனிமை ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வருகின்ற  26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து  2-வது டெஸ்ட் போட்டி (ஜனவரி 3- 7)ஜோகன்ஸ் பர்க்கிலும், கடைசி டெஸ்ட் போட்டி (ஜனவரி 11- 15) கேப் டவுனிலும் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய அணிக்கு கோலி ரொம்ப முக்கியம் ‘ ….! ரோகித் சர்மா ஓபன் டாக் ….!!!

ஒரு பேட்ஸ்மேனாக  விராட் கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியமானதாகும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் டி20  கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி நீக்கப்பட்ட நிலையில்  ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,” டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என  விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் தொடர்: துணைக் கேப்டன் பதவியை இழந்த ரகானே….! இந்திய அணி அறிவிப்பு …!!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் அணியில் ரஹானே நீடிப்பாரா ….? போட்டு உடைத்த விராட் கோலி….!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானே நீடிப்பது குறித்து  கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்  . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது .இதனிடையே அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது .இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .ஏனெனில் ரஹானே கடைசியாக விளையாடிய 23 டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சீனியர் வீரர்கள் இடத்திற்கு ஆபத்து”….! சூசகமாக சொன்ன டிராவிட்….!!!

அணி வீரர்கள் தேர்வில் எங்களுக்கு தலைவலி காத்திருக்கிறது என இந்திய அணியின்  தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  கூறியுள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்நிலையில் இந்திய அணி வெற்றிக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  நிருபர்களிடம் கூறும்போது, “டெஸ்ட் தொடரை வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .இதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம் .அதேசமயம் இளம் வீரர்கள் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 50 வெற்றிகள் ….! ‘கிங்’ கோலியின் மாஸ் ரெகார்ட் …..!!!

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ள முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : நியூஸியை ஓரங்கட்டிய இந்தியா ….! முதலிடம் பிடித்து அசத்தல் …!!!

ஐசிசி டெஸ்ட்கிரிக்கெட் தொடருக்கான  தரவரிசை பட்டியலில் இந்திய அணி  முதலிடத்தை பிடித்துள்ளது.  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று  வெளியிட்டது. இதில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அதோடு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ : தொடர் நாயகன் விருது ….! அஸ்வின் புதிய சாதனை ….!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார். இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதற்கு முன் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” வெற்றிநடை போடும் இந்திய அணி” ….! ‘சொந்த மண்ணில் அசாத்திய சாதனை’ ….! விவரம் இதோ ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள  இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு 1-0 என்ற கணக்கில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை நான் பார்த்ததே இல்ல” ….! இந்திய அணி குறித்து கங்குலி ஓபன் டாக் ….!!!

சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது. சமீபத்தில்  நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது.இது குறித்து முன்னாள் வீரர்கள் , ரசிகர்கள் பலர் இந்திய அணிக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ,”கடந்த 4 முதல் 5 வருடங்களில் இந்திய அணி டி20 போட்டிகளில் மோசமாக செயல்பட்டது உலக கோப்பை டி20 போட்டியில் தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS SA டெஸ்ட் போட்டி 26-ல் தொடங்கும்….! பிசிசிஐ அறிவிப்பு….!!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி  வருகின்ற  26-ம் தேதி நடைபெறும்  என பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது .இதற்கான ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 -ஆம் தேதி  தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில்  ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ: என்னடா இது கோலிக்கு வந்த சோதனை ….! மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடிப்பு ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிஏன்  கேப்டன் விராட் கோலி  டக்அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது .இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : 2-வது டெஸ்ட் போட்டியில் ….! முக்கிய வீரர்கள் விலகல் …!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் கான்பூரில் நடந்த  முதல்  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . NEWS – Injury updates – New Zealand’s Tour of India Ishant Sharma, Ajinkya Rahane […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியா அணியில் நீக்கப்பட்டது ஏன் ….? விளக்கம் கொடுத்த கங்குலி …..!!!

ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம்  குறித்து பிசிசிஐ தலைவர்  கங்குலி விளக்கம் அளித்துள்ளார் . சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு சமீபத்தில் நடந்து முடிந்த 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா முழு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டார் .அப்போட்டியில் ஒரு ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோல்வியே சந்திக்காத கேப்டன் ரகானே….!!!!

டெஸ்ட் மற்றும் 1-நாள் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத கேப்டன் என பெருமை பெற்றுள்ளார் ரகானே. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரகானே செயல்பட்டார். இந்நிலையில் போட்டி டிராவில் முடிந்ததையடுத்தது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு தோல்வியே சந்திக்காத கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இவர் இதுவரை 6 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 4 போட்டிகளில் வெற்றியும் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்த டெஸ்டில் நான் விளையாடுவேனா என எனக்கு தெரியாது”….! ரஹானே ஓபன் டாக் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நான் விளையாடுவது குறித்து   அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என ரஹானே கூறியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவல் முடிந்தது இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக இப்போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னை டீம்ல எடுக்காதீங்க” …..! கோரிக்க வைத்த ஹர்திக்  பாண்டியா….! காரணம் இதுதான் …..!!!

முழு உடல் தகுதி எட்டும்வரை இந்திய  அணியில் என்னை சேர்க்க வேண்டாம் என  ஹர்திக்  பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் பேட்டிங் பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வந்தார்.அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் முதுகு பிரச்சனைக்காக  அறுவை சிகிச்சை செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய வகை கொரோனா எதிரொலி…..! இந்தியா- தென்ஆப்பிரிக்கா தொடர் நடைபெறுமா …..?

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  டிசம்பர் 17-ம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . தென் ஆப்பிரிக்கா தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதோடு இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் தன்மை கொண்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனி ,இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும்  இத்தாலி உட்பட நாடுகள் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு கடும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேசமயம் இந்த புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்கு ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் பண்ணிருக்னும்” ….! தினேஷ் கார்த்திக் புகழாரம் ….!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .மேலும் இத்தொடரில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் போட்டிக்கு  முன்பாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை  ஸ்ரேயாஸ் அய்யரிடம் வழங்கி அவரை அறிமுகப்படுத்தினார். You're a blessed […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க அப்படி சொல்லவே இல்ல” …..! ‘ஹலால்’ உணவு விவகாரத்தில் ….பிசிசிஐ நிர்வாகி வெளிப்படை பேச்சு ……!!!

இந்திய அணி வீரர்கள் ‘ஹலால்’ உணவுகளை  மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி, பன்றி கறி ஆகிய உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ளக் கூடாது எனவும், அதோடு அசைவ உணவு வகைகளில் ‘ஹலால்’ உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என பிசிசிஐ உத்தரவு  […]

Categories
உலக செய்திகள்

“உலக டேபிள் டென்னில் போட்டி தொடக்கம்!”.. 9 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு..!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த ஒன்பது நபர்களும், தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு அணிகள் போன்ற பிரிவில் விளையாடுவார்கள். சரத் கமல், அந்தோணி அமல்ராஜ், சத்தியன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் சூப்பர் ஸ்டார்கள் இவர்கள் தான்….! இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்த பாண்டிங் …!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” டி20 போட்டியில் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார். தற்போது இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்,, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“செம போடு போட்ட ஹிட்மேன் ரோகித்” ….! டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ….விவரம் இதோ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் இந்திய அணி 73  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்”….! ராகுல் டிராவிட்க்கு கம்பீர் புகழாரம் ….!!!

இந்திய அணியை சிறந்த அணியாக ராகுல் டிராவிட்  மாற்றுவார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது தலைமையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது .இதில் போட்டிக்கு  முன்னதாக கவுதம் கம்பீர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : ‘டாப் 10’-ல் இந்திய பவுலர்களுக்கு இடமில்லை …..!!!

ஐசிசி-யின் டி 20 கிரிக்கெட்டின் புதிய  தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  வெளியிட்டுள்ளது . ஐசிசி டி 20 தொடருக்கான  புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது .இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும் ,இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் இரண்டாவது இடத்திலும் , தென்னாபிரிக்க அணியில் மார்க்ராம் மூன்றாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. இதையடுத்து நியூசிலாந்து அணியில் டேவான் கான்வே 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்ததாக பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் அசாம் கேப்டன்…. “ஆனால் இந்திய வீரர் ஒருத்தர் கூட இல்ல”… அணியை அறிவித்த ஐ.சி.சி!!

பாபர் அசாம் தலைமையில் டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது ஐ.சி.சி. டி20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடந்து முடிந்துள்ளது.. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணி துபாயில் நேற்று மோதியது.. இதில் டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்தது ஆஸ்திரேலியா. இதையடுத்து  ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர்’ …. ! இந்திய அணியில் அடியெடுத்து வைத்த நாள் இன்று …..!!!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இன்றைய நாளில்  பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இதே நாளில் தன்னுடைய 16வது வயதில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் இதையடுத்து சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு அவர் அறிமுகமான அதே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சி விலகல்: விராட் கோலி, ரவி சாஸ்திரி…. இந்திய அணியில் பரபரப்பு….!!!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அணியில் வீரர்கள் தேர்வு தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அந்த போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்த நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரவிசாஸ்திரி,விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் விலகலாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில்…. ஹனுமா விஹாரி சேர்ப்பு…..!!!!

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணியில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய ‘ஏ’ கிரிக்கெட்அணி வருகின்ற 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை விளையாட உள்ளது.  3 போட்டிகள் கொண்ட தொடரில் பிரியங் பன்சால் தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய ‘ஏ’ அணி முன்பே  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார் .இதனை பிசிசிஐ நீக்கி உறுதிப்படுத்தியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

INDIA VS NZ டெஸ்ட் தொடர் : ரகானே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு …..!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை  பிசிசிஐ அறிவித்துள்ளது. #TeamIndia squad for NZ Tests: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் : இந்திய அணியில் இளம் வீரர்கள் சேர்ப்பு ….! வெளியான தகவல் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான  வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோருக்கு இத்தொடரில்  இருந்துஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை கனவு தகர்த்தது ….! வேதனையில் ரசிகர்கள் …..!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன்  மூலமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டி 20 உலக கோப்பை தொடரில் அபுதாபியில் இன்று நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து .அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது. இதன் பிறகு  125 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒருசில போட்டியை வைத்து இப்படி சொல்லாதீங்க”….. ரவீந்திர ஜடேஜா கருத்து …..!!!

ஒருசில போட்டிகளை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என  ஜடேஜா தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க 2 ஆட்டங்களிலும் படுமோசமாக தோல்வியடைந்தது .இதையடுத்து  ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு ரன் ரேட்டிலும் முன்னேறியது .இதனிடையே  இன்று நடக்கும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுதான்  இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சீனியர்க்கு ரெஸ்ட் கொடுத்துட்டு “…. ‘இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும்’ ….. முன்னாள் வீரர் சேவாக் கருத்து …..!!!

நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் வலியுறுத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் வருகின்ற 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி20 போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,டிசம்பர் 3-ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இதேமாதிரி விளையாடுன’ …. ‘எங்களை யாராலும் வீழ்த்த முடியாது’ ….! கெத்தாக பேசிய ஜடேஜா ….!!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டியில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும் என ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்திய அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .குறிப்பாக இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்க வெற்றிக்கு காரணம் இதுதான்’ -கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் .  டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் 17.4  ஓவரில் […]

Categories

Tech |