மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது.இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா- ஸ்மிர்தி மந்தனா ஜோடி களமிறங்கினர். […]
