Categories
தேசிய செய்திகள்

“காற்றில் பரவும் கொரோனா” அச்சம் வேண்டாம்…. இதை செய்தால் போதும்….!!

காற்றில் கொரோனா பரவும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த நிலையில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் ஹுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்தும், அது பரவக்கூடிய தன்மை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாள்தோறும் பல தகவல்கள் கொரோனா குறித்து வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மொத்த பாதிப்பில் 63%….. “கவனம் தேவை” 5 மாநில மக்களுக்கு எச்சரிக்கை….!!

கடந்த ஜூன் மாதத்தில் இறுதியில் மட்டும் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் பாதிப்பு இந்தியாவின் மொத்த பாதிப்பில் 63 சதவிகிதம் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமுல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மாத இறுதிக்கு முன் வரையிலும், கொரோனா பாதிப்பு சீராக கட்டுக்குள் இருந்த நிலையில், மே மாத இறுதி வாரத்திலும், ஜூன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

சூரிய ஒளி தகடு ஊழல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்ட சரிதாநாயரை போன்று இப்போது தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாஜக தலைவர் உட்பட 3பேர் கொலை …!!

ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாஜக முன்னாள் தலைவர் வாசிம், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்…. அதிரடி காட்டி கலக்கிய தமிழிசை …!!

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் மருந்து வழங்கியதற்கு பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அடுத்து அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பெண் மருத்துவர் விஜயா, தந்தையார் யாதகிரிராவ் இருவரும் உடல்நலம் பாதித்ததால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான கட்டணமாக […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டில் தமிழகம்… மொத்தமாக 5 மாநிலம்…. 70% இருப்பதால் அதிர்ச்சி …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. ஜூலை முதல் வார முடிவில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த எண்ணிக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் – நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு ..!!

நாடு முழுவதும் 9ஆம் 12ஆம்  வகுப்பு வரை 190 பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது 2020 – 2021ஆம் கல்வியாண்டுக்கும் மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிக்கு புரியல… மிரட்ட முடியாது… அடிபணிய முடியாது…. ராகுல் அதிரடி ட்விட் …!!

உண்மைக்காக போராடுபவர்களை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேரு குடும்பத்தின் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக தொடர்பாக விசாரணை நடத்திய நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்ததை தொடர்ந்து ட்விட்டரில் ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில் மற்றவர்களும் தம்மை போன்று இருப்பார்கள் என்று மோடி நினைப்பதாக ராகுல் விமர்சித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் விலை உண்டு என்று மோடி கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைக்கு போராடுபவர்களுக்கு விலை இல்லை என்பதை மோடி புரிந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவை விமர்சித்த ராகுல்…. சாட்டையை சுழற்றிய மத்திய அரசு… திணறும் காங்கிரஸ் …!!

நேரு குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையேயான லடாக் எல்லையில் மோதல் முண்ட பிறகு மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடியாக ராஜீவ்காந்தி பவுண்டேஷனுக்கு சீன தூதரகம் மூலம் நிதி கிடைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் தலைமையில் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிராஸுக்கு சரிதா…. கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்வப்னா…. சிக்கலில் கேரளா அரசு ….!!

கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு தங்க கடத்தல் விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த விவகாரம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இமயமலைக்கு ஆசை” இந்தியாவை தொடர்ந்து…. பூட்டானை வம்பிழுக்கும் சீனா….!!

இந்தியாவை தொடர்ந்து பூட்டானிடம் எல்லைப் பிரச்சனையை ஏற்படுத்த சீனா முயல்வதாக புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே. இந்த எல்லையில் இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்திலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால் தவறு சீனாவின் மீது இருப்பதன் காரணமாக உலக நாடுகளும், இந்திய மக்களும் இந்த சீனாவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. கிழக்கு ரயில்வேயில் வேலை…. 1075 பணியிடங்கள் …!!

நிர்வாகம் : கிழக்கு இரயில்வேத் துறை மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 1075 பணி மற்றும் காலிப் பணி விபரங்கள் எலக்ட்ரானிக் மெக்கானிக் – 75 Blacksmith – 09 Mechanic Maintenance – 09 எலக்ட்ரீஷியன் – 593 மெக்கானிக் – 54 வையர்மேன் – 67 லைன் மேன் – 49 பெயிண்டர் – 26 கார்ப்பெண்டர் – 09 மெசினிஸ்ட் – 63 தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://apprentice.rrcrecruit.co.in/gen_instructions_er.aspx  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ்: இந்தியாவில் 61.53% பேர் குணம் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில்  கொரோனா பாதிக்கப்பட்டோரில் 61.53 விழுக்காடு பேர் குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 16853 பேர் புற்று நோயிலிருந்து குணமடைந்து இருப்பதாக தன்னுடைய செய்தி குறிப்பிடுகிறது என்று இதுவரை 61.5 3 விழுக்காடு வேறு குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரையில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 833 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

3000 போலீஸ் தேடும் உ.பி ரவுடி…! புல்லட் ஃப்ரூஃப் கார்களில் உலா….!!

கடந்த நான்கு நாட்களில் தேசிய அளவிலான ஊடகங்கள் ஒரு ரௌடியை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். புல்லெட் புரூப் கார்களில் சுற்றி வரும் பயங்கர ரவுடி: உத்தரப்பிரதேஷத்தில் உள்ள மிகப்பெரிய ரௌடியை பிடிப்பதற்கு 50 போலீஸ் செல்கிறார்கள். அவரை பிடிப்பதற்கு 200 மீட்டர் முன்னாடி செல்லும் போது கரண்ட் ஆப் ஆகுது. அது மட்டுமல்ல,  புல்டவுஸர் ரோட்டில் நின்றது. போலீசார் இதனை  சிந்திக்காமல்,  இது சதியாக இருக்குமா என சிந்திக்காமல்… பிடிக்கவந்த ஆர்வத்தில் இறங்கி புல்டவுசர் எல்லாம் தாண்டி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு…. 3 மாதத்திற்கு இலவசம்… மத்திய அரசு ஒப்புதல் …!!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை மேலும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் பிரதமர் அறிவித்த நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன்  திட்டத்துக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனாவை தடுக்க உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை”அதிகரிக்கும் முறைகள் என்ன ?

கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன: கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன என்னென்ன பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சுய  பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது அதனை இப்போது பார்க்கலாம். நாள்முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் ஆயுஸ் அமைச்சகம் அறிவுறுத்திய படி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கேட்டு சென்ற ஊழியர் …. நாயை கடிக்க விட்ட பெண் உரிமையாளர் … டெல்லியில் கொடூரம் …!!

வேலை செய்ததுக்கு சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கொடூரம் அரேங்கேறியுள்ளது. நிகிதா என்ற பெண் டெல்லியில் உள்ள கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் வைத்துள்ளார். இந்த சென்டரில் சப்னா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார், இவர் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் தான் வேலை செய்த சம்பளத்தை கேட்டதற்கு நிகிதா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ள நிலையில்  நிகிதா தனது வளர்ப்பு நாயை அவிழ்த்து விட்டு சப்னாவை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் […]

Categories
அரசியல்

டாப்க்கு போன தமிழகம்… கெத்தாக முதலிடம்…. இந்தியாவிலே செம மாஸ் …!!

தமிழகத்தில் நேற்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க ? திரும்பவும் அப்படி சொல்லுறீங்க…! முதல்வரால் நொந்த மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது.  தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.29 கட்டுங்க….! ”ரூ.24,000 ஸ்வாகா” வேலைக்காக பணத்தை இழந்த இளைஞர் …!!

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கினால் பல மக்கள் வேலையிழந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி இணையத்தில் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் குயூக்கர் கரியர் (quicker carrier) என்ற வலைதளத்தில் வீட்டிலிருந்து வேலைச் செய்யும் பணியை தேர்வுச் செய்து வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது வேலை விண்ணப்பத்திற்கான கட்டணமாக 29 ரூபாயை செலுத்த தனது வங்கி கணக்கை அனுமதித்துள்ளார். அப்போது ​​ஹேக்கர்கள் அவரது கணக்கிலிருந்த 24 ஆயிரம் ரூபாயையும் திருடியுள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,948,181 பேர் பாதித்துள்ளனர். 6,849,020 பேர் குணமடைந்த நிலையில். 546,547 பேர் உயிரிழந்துள்ளனர். 4,552,614 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,193 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,097,084 குணமடைந்தவர்கள் : 1,354,863 இறந்தவர்கள் : 133,972 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,608,249 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஊதிய உயர்வு…. அள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி…. மெர்சலான ஊழியர்கள் …!!

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது 80 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை எட்டு விழுக்காடுவரை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல துறைகளும் பெரும் இழப்பை சந்தித்துவருகின்றன. இதனால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதிய உயர்வை நிறத்தி வைப்பது, ஊதியத்தைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதில் வெற்றி பெறுவது தனித்துவமானது… அதனை நீங்கள் உணர்வீர்கள்… மனம் திறந்த கங்குலி…!!

இங்கிலாந்தில் நடக்கும் நார்த் வெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது தனித்துவமானது என்று கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்  சவுரவ் கங்குலி பற்றி கூறினாலே லார்ட்ஸ் மைதானம் விளையாட்டு அரங்கின் பால்கனியில் நின்று கொண்டு தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடிய நிகழ்வுதான் ரசிகர்களின் நினைவிற்கு வரும்.              பின் நாட்களில் இந்த வெற்றி கொண்டாட்டமே இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாற்று சின்னமாக மாறிவிட்டது என்றே […]

Categories
வேலைவாய்ப்பு

வேலை… வேலை… ரூ..80,000 சம்பளம்… கெத்தன வாழ்க்கை… உடனே விண்ணப்பியுங்க ..!!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியிடங்கள் ; நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேலாண்மை : மத்திய அரசு பணி : மூத்த ஆராய்ச்சி அதிகாரி காலிப் பணியிடங்கள் : 04 தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு எம்பிஏ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.80,000 மாதம் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற  இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்டறிய புதிய பரிசோதனை முறை…..! அசத்திய பெங்களூரு நிறுவனம் …!!

கொரோனா  பரிசோதனையின் கட்டணத்தைக் குறைக்கும் வண்ணமாக பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புதிய பரிசோதனை முறையை கண்டறிந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் மிதவேகத்தில் அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த அதற்கான பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலங்களிலும் முறையான பரிசோதனைகளால்தான் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியும். அதிக பரிசோதனைகள் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும். கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினாலும் அதனுடைய கட்டணம் சாமானியர்களை கரோனா பரிசோதனைக் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும் – வெள்ளை மாளிகை தகவல் …!!

சீனாவுக்கு எதிரான மோதலில் இந்தியாவுடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் மார்க் மெடோஸ் கூறுகையில், “தென் சீனக் கடலுக்கு இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளோம். அமெரிக்காவின் ராணுவ பலத்தைக் காட்டவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். சீனா போன்ற நாடுகள் இந்தியாவிலோ வேறெந்த பிராந்தியத்திலோ அராஜக போக்கை கையாள்வது, ஆதிக்கத்தைச் செலுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” […]

Categories
உலக செய்திகள்

சீனா ரொம்ப மோசம்…. ஹாங்காங் வேண்டாம்…. வெளியேறும் டிக்டாக் …!!

தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டைத் தொடர்ந்து ஹாங்காங் மீதான சீனாவின் பிடி இறுகியுள்ளதால், ஹாங்காங்கில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்தவுள்ளதாக டிக்டாக் அறிவித்துள்ளது. சிறு வீடியோக்களை எடுக்க உதவும் டிக்டாக் செயலி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் ByteDance என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இச்செயலி சீனாவில் தனது சேவையை வழங்குவதில்லை. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங் பகுதியில் மட்டுமே டிக்டாக் தனது சேவையை வழங்கிவருகிறது. சீன நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டின் உளவுத்துறைக்குத் தேவையான தகவல்களை வழங்கி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல அமெரிக்கா…. புறக்கணிக்கப்பட்ட சீனா… அஞ்சி நடுக்கும் சோகம் ..!!

டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து. இந்தியாவைத் தொடர்ந்து வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 9 -12ம் வகுப்புக்கு அறிவிப்பு …. குஷி ஆன மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 %  பாடத்திட்டத்தை குறைக்க முடிவு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேரளா கூட சொல்லிட்டு…. தயங்கும் தமிழக அரசு…. மறைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1571  உயிர் இழந்துள்ளார்கள். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையில் சிறப்பான பலன் அளிக்‍கும் ரெம்டிசிவிர் …!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திவரும் ரெம்டிசிவர் மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக மைலான் நிறுவனம் தெரிவித்துள்ளது : கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டிசிவிர் மருந்தை இந்தியாவில் 100 மில்லி கிராம் 4800 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப் போவதாக அமெரிக்காவின் மைலான் நிறுவனம் அறிவித்துள்ளது கொரோனாவுக்கு எதிராக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த மருந்தும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இந்தியாவில் ஹைட்ராக்ஸி குலோராக்குவின் மருந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று ரெம்டிசிவிர் என்ற மருந்தை அமெரிக்கா பயன்படுத்திவருகிறது. அமெரிக்காவின் கைலீட் மருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

39 -ஆவது பிறந்தநாளை காணும் எம்.எஸ்.தோனி – கவுரவப்படுத்திய பி.சி.சி.ஐ…!!

கிரிக்கெட்டில் தல என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 39 – ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். பெஸ்ட் பினிஷெர் என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்களால் எம்.எஸ்.தோணி அழைக்கப்படுகிறார். இந்தியாவுக்கு 3 வித உலகக் கோப்பைகளை பெற்றுத்தந்த ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி தான். களத்தில் எப்போதும் பதற்றமின்றி காணப்படும் இவர் எதிராணிகளுக்கு எதிரான திட்டங்களை வகுப்பதில் கைத்தேர்ந்தவர். எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளையொட்டி இந்திய கிரிக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக பரவலாக மாறிய கொரோனா…. கேரளா, கர்நாடகா அரசு தகவல் …!!

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை நெருங்கி விட்டது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி கே.கே சைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்  இல்லாதவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

25 வயது பெண்ணுடன் காவல் ஆய்வாளர்…. போலீஸ் ஜீப்பில் உல்லாச பயணம் …!!

கேரள மாநில கல்லூரில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சீனு என்பவர் இரவு 11 மணி அளவில் 25 வயதான பெண்ணுடன் வெகுநேரம் போலிஸ் ஜீப்பில் சுற்றிய பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்ராஜானுக்கு அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே … 2ம் இடத்தில் இந்தியா…. அதிர்ச்சியில் மத்திய அரசு….!!

நேற்றைய கொரோனா உயிரிழப்பில் இந்தியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு இனி வேலை இல்லை… 8 லட்சம் பேருக்கு ஷாக் கொடுத்த குவைத் …!!

குவைத்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வரைவு மசோதாவுக்கு அந்நாட்டின் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடான குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, எண்ணெய் விலை குறைவு ஆகியவற்றால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் அங்கு வேலைவாய்ப்பும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. செப்டம்பர் மாதத்திற்குள்…. ஏமாந்து போன மாணவர்கள் …!!

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு யூஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கல்விநிலையங்களில் நடைபெறாமல் இருந்த பொதுத் தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. மாநில பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சரி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,739,167 பேர் பாதித்துள்ளனர். 6,641,864 பேர் குணமடைந்த நிலையில். 540,660 பேர் உயிரிழந்துள்ளனர். 4,556,643 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,979 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,040,833 குணமடைந்தவர்கள் : 1,324,947 இறந்தவர்கள் : 132,979 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,582,907 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

3மாத பதற்றம் முடிவுக்கு வந்தது ? எல்லையில் இதுவரை நடந்தது என்ன?

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக பார்க்கலாம். மே – 5 : லாடாக் எல்லையின் பாங்காங் ட்சோ பகுதியில் இந்திய-சீனப் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். மே – 10 : […]

Categories
உலக செய்திகள்

சாப்பிட்ட தான் செய்யுறாங்க…. உலகமே நடுங்குது… அச்சுறுத்தும் சீனர்களின் உணவுப்பழக்கம் ..!!

எந்த உயிரினத்தைக் கண்டாலும் வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் சீனர்கள்.. இவர்களின் இந்த உணவுப் பழக்க வழக்கத்தால் தான் ஒவ்வொரு நாளும் புதியவகை நோய்கள் பரவிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை பல உலகநாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொடூர கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உலகநாடுகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு செய்தி உலக மக்கள் தலையில் இடியாய் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …!!

கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம்  உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் நாடு முழுவதும் இறுதி தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் யூஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்த நிலையில்,  […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“தரம்… தரம்…. நிரந்தரம்” அனைத்திலும் NO.1…. தல தோனியின் TOP 20 சாதனைகள்….!!

1. உலகிலேயே ஐசிசியின் மூன்று முக்கியமான கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி. 2. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக  ஸ்டம்பிங்  செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி இதுவரை சுமார் 178 ஸ்டம்பிங் செய்துள்ளார். 3. சிக்ஸ் அடித்து போட்டியை வெல்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகவும் சவாலான விஷயம் கடைசி நேரத்தில் குறைந்த பந்துகள்  மட்டுமே இருக்கும் நிலையில் துணிந்து 6 அடிப்பது என்பது சாதாரண […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – ஷாக் கொடுத்த மத்திய அரசு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில்  அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாரை கூண்டோடு வேட்டையாடிய வில்லாதி வில்லன்!

நடந்தது என்ன ? உத்திரபிரதேச மாநிலம் திக்ரு என்ற கிராமத்தில் அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. 60 குற்றங்களுடன் தொடர்புடைய துபே என்பவர் இந்த இடத்தில் ஒளிந்து இருக்காரு என்ற தகவல் வருகின்றது.  அவர் மீதான எந்த குற்றமும் நிரூபித்து பெரிய தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை…. ஜெயிலில் போட்டால்  வெளியே வந்து மறுபடியும் தப்பு பண்ணி பெரிய gangster  ஆகி வலம் வருகிறார். அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய கூட்டம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியைத் தாண்டியது கொரோனா பரிசோதனை …!!

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஜிஎம்ஆர்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் பரிசோதனைகளை தினமும் அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆக.25இல்…. நடக்க போகும் அற்புதம்…. எதிர்பார்ப்பில் மக்கள் ….!!

சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து  பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தக்கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகமும் இந்த பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து  பரிசித்திக்க உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. […]

Categories
அரசியல் கல்வி தேசிய செய்திகள்

எம்.சி மேற்படிப்பில் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 2 ஆண்டுகளாக மாற்றம்….!

எம்.சி.ஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய  குழு (யூஜிசி) ஒப்புதலையடுத்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம் சி ஏ -வில் சேர பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பி.எஸ்.சி, பி.ஏ படித்தவர்கள் பிளஸ் -2 வில் கணிதத்தை படமாக படித்திருக்க வேண்டும். எம் சி ஏ படிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. உலகளவில் 3ஆம் இடத்தில் இருக்கின்றது …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்23,932420 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு வருகிற 30-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ள நிலையில் தினந்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரானாவின் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 162 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு….! மகிழ்ச்சியால் திணறும் மாணவர்கள் ….!!

எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்ற்றியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம். பல்கலைக்கழக அனுமதி குழு ( யுஜிசி ) ஒப்புதலையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பாக மாற்றம்.எம்சிஏ வில் சேர பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பிஸ்சி, பிஏ, படித்தவர்கள் பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ படிப்பு இரண்டாண்டாக […]

Categories

Tech |