இந்திய இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்ற பிரதமர் மோடியை கேட்டு விடுவார்கள் என்பதால் “பப்ஜி” விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி இதனை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். […]
