இந்தியாவில் முதல் முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களை பெற “கால்நடை மருத்துவர்” என்ற செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலில், காணொளி மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும். இதில் 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
