இந்தியாவில் தற்போது வரை மூன்று கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனையின் இறுதிக் கட்டங்களில் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த தடுப்பு மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளாக இருப்பதாக […]
