Categories
தேசிய செய்திகள்

83 லட்சத்தை கடந்த பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 53,357 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46,254 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,13,877 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,23,611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,357 பேர் குணமடைந்து வீடு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த போலீஸ்… பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது ?

பிரபல ஊடகவியலாளர் ர்னாப் கோஸ்வாமியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். பிரபல ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். தனது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி இருக்கிறார். ரிபப்ளிக் டிவி ரேட்டிங் முறைகேடு செய்ததாக புகார் உள்ள நிலையில் அவரை அழைத்து சென்றுள்ளது போலீஸ். வீட்டிற்குள் வந்து வலுக்கட்டாயமாக அழைத்து செய்வதால் கைது செய்யப்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வர்த்தகம் மிகவும் குறைவு… வீழ்ச்சியை சந்திக்கும் இந்தியா… மத்திய வர்த்தகம் தகவல்…!!!

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5.4 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள் மற்றும் தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி தான் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைப் போலவே […]

Categories
தேசிய செய்திகள்

3 ரபேல் போர் விமானங்கள்… பிரான்ஸிலிருந்து இன்று இந்தியா வருகை…!!!

இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சிலிருந்து இன்று மாலை இந்தியா வருகின்றன. இந்திய அரசு நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 36 விமானங்கள் வாங்குவதற்கு 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன் முதல் தவணையாக பிரான்ஸ் நிறுவனம் 5 விமானங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் எங்கள் வெற்றியா…? அதிர்ந்த இம்ரான்கான்….. அமைச்சருக்கு சம்மன்…!!

புல்வமா தாக்குதல் பாகிஸ்தானின் வெற்றி என்று கூறிய அமைச்சருக்கு பிரதமர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்திய பகுதியான புல்வாமாவில் வைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலினால் 40 சிஆர்பிஎப் படையினர் வீரமரணம் அடைந்தனர். சமீபத்தில் அந்த தாக்குதலை மேற்கோளிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி பேசினார். அப்போது இம்ரான் கான் தலைமையில் புல்வாமா தாக்குதல் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளசுகளே மண்ட பத்திரம்…. கவனமா விளையாடுங்க…. அறிவுரை சொன்ன சச்சின் …!!

இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் தெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய அந்தப் போட்டியை சச்சின் இதில் சுட்டி காட்டி இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவில், போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பாக பாமரமக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வருவதற்கு, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பலரும் அஞ்சல் சேமிப்பையே நாடியுள்ளனர். வங்கிக்கு செல்ல முடியாத பலரும் அஞ்சல் சேமிப்பால் பலனடைந்தவர்கள் ஆகவே இருக்கின்றனர். இந்த நிலையில்தான் அஞ்சல் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 500 ஆக உயர்த்திக்கொள்ள டிசம்பர் 11ம் தேதி வரை கால […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல, 2இல்ல…. 200பயங்கரவாதிகள்… சுட்டு வீழ்த்திய இந்திய படை… நடுங்கும் தீவிரவாதம் …!!

நடப்பாண்டில் இதுவரை 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புப்படையினர் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடியால் இதுவரை(ஜன – அக்) பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, 157 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாதுகாப்புப்படையினரிடம் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவம், மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்போதைக்கு தேனிலவு வேண்டாம்…. திருமணம் முடிந்து முடிவெடுத்த காஜல் …!!

நடிகை காஜல் அகர்வால் வெளிநாட்டு ஹனிமூன் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதமை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் டிரென்ட் ஆகியது. திருமணம் முடிந்த கையோடு தேனிலவை வெளிநாடுகளில் கொண்டாட திட்டமிட்டு இருந்த காஜல்அகர்வால் தற்போது அதனை தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வைரலாகி வருகின்றன. காஜல் அகர்வால் தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்க, வெடிக்க தடை – அரசு பரபரப்பு அறிவிப்பு …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசால் ஏற்படும் நச்சு புகையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், மக்களையும் காப்பாற்றும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார். தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.50 கட்டணம் செலுத்தணும்….! வங்கியின் திடீர் முடிவால்… திணறும் வாடிக்கையாளர்கள் ..!!

வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. கொரோனா  அச்சம் காரணமாக வங்கிக்கு செல்ல அஞ்சும் மக்கள் முடிந்தவரை தங்களின் பணபரிவர்தனையை ஏடிஎம் இயந்திரங்களிலேயே மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 5-க்குள் வாடிக்கையாளர் கணக்கில் செலுத்த – ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கிக்கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை நவம்பர் 5ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள்  கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அனைத்து தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்கும் தொகைக்கு ஈடான […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் – அரசு அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் அடுத்த பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30 ஆம் தேதி வரை இது கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை 4 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பல்வேறு விஷயங்களில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் வார்டு வாரியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் யாருக்கு இருக்கு வாய்ப்பு ? புள்ளி பட்டியல் இதோ …!!

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. 13வது ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் நாலு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சென்றுள்ளது. சென்னை தவிர்த்து மீதமுள்ள 6 அணிகளுக்கிடையே பிளே ஆப் போட்டி கடுமையாக நிலவி வருகிறது. யார் பிளே ஆப் செல்வார் என்று எதிர்பார்ப்பு 6 அணி ரசிகர்கள் மத்தியிலே இருந்து வருகிறது. இன்றைய போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க கேம் இன்னும் முடியல… பிளே ஆஃப்பை தக்கவைத்து…. RCBயை பந்தாடிய SRH …!!

பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.31) நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் தொடங்கிய காதல்…. சொகுசு விடுதியில் முடிந்தது… அரங்கேறிய கொடூரம் ….!!

கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் அங்குள்ள வாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் தொலைபேசியில் ராங் கால் மூலமாக பேசியுள்ளார். இருவரும் சாதாரணமாக பேசி பின்னர் நட்பாக மாறி, அது காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இளம்பெண்னிடம்உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று இளைஞர் சொல்லியுள்ளார். அதற்க்கு அந்தப் பெண் இந்த வார்த்தைக்காக தான் இத்தனை நாள் நான் காத்திருந்தேன் என்று சொல்லி நாம் இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என்று குறிப்பிட்ட […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் புதிதாக 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 48 ஆயிரத்து 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 பேராக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 551 பேரில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து […]

Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 மருத்துவமனைகளில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 1,21,090 பேர் பலி…!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 563 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 648 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 386 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கு இன்று முதல் முற்றிலுமாக தடை

இந்தியாவில் இன்று முதல் பப்ஜி செயலிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. அண்டை நாடான சீனாவுடனான  பிரச்சனைக்கு பின்னர் அந்த நாட்டின் டிக் டாக், ஷேர்இட், உள்ளிட்ட மொபைல் போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரபல விளையாட்டு செயலியான பப்ஜி  உள்ளிட்டவற்றிற்கும் மத்திய அரசு தடை விதித்தது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பப்ஜி செயலி நீக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அதை முற்றிலும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

Bank Holidays: 8 நாட்களுக்கு வங்கி விடுமுறை – முக்கிய அறிவிப்பு !

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர்  மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது. வங்கிகள்  பொதுவான  விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும்.  நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வு ரத்தில் உடன்பாடில்லை – யுஜிசி

அரியர் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் உடன்பாடு இல்லை என்று யுஜிசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. யுஜிசி நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியாத நிலையில் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இதற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அரிய […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது…!!

அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு சலுகைகள் கிடைக்கக்கூடாது என்பதில் மத்திய பாரதிய ஜனதா அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு முத்தரசன் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக சாட்டினார்.

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி..!! கொரோனா தடுப்பூசி இலவசம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

மக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என்று உதரதேசம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகிறது. இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் வெற்றியடைந்தால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பீகார் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எஃப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்…!!

இந்திய கடற்படைக்கு எஃப் 18 ரக போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகள் இடையே நேற்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக எஃப் 18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆளில்லா விமானங்கள் உட்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன் வந்துள்ளது. இந்தியக் கடற்படையில் தற்போதுள்ள ஐஎன்எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் பெற்ற அனைவருக்கும் – மிக மகிழ்ச்சி அறிவிப்பு ….!!

தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், தவிர்க்க முடியாத சூழலில்  பொதுமக்கள் வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்கி வாழ்க்கையை சமாளித்து வந்தனர். கொரோனா பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,  இந்த கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத இன்னலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்  ரிசர்வ் வங்கி மக்களிடம் கடனுக்கான வட்டி வசூலிக்க கூடாது என்று தெரிவித்திருந்தது  தற்போது அதற்கான உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும்,  […]

Categories
தேசிய செய்திகள்

இதை யாரும் நம்பாதீங்க…. பட்ட கஷ்டம் எல்லாம் பாலாயிடும்…. வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு – இரண்டு இடங்களில் வெடிகுண்டு கண்டெடுப்பு ….!!

கொரோன அச்சுறுத்தலுக்கு இடையே பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இந்த பீகார் சட்ட மன்ற தேர்தல். மொத்தமாக 71 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். தற்போது அவுரங்காபாத்தில் இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, அவை செயலிழக்க […]

Categories
தேசிய செய்திகள்

1,00,000 டன் டார்கெட்…. குறையுமா வெங்காய விலை? எதிர்பார்ப்பில் மக்கள் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் – சீனா உடனான எல்லை பிரச்னையை கையாள உதவும்

இந்தியா-அமெரிக்கா இடையே அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் அமெரிக்க செயற்கைக் கோள்களில் இருந்து துல்லியமான தரவுகளையும்  நிலப்பரப்பு படங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் இருந்து குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாடுகளைக் கொண்ட முக்கியமான தகவல்களை இந்தியா அணுக முடியும். இதுகுறித்து டெல்லியில் விளக்கமளித்த ராஜ்நாத்சிங் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைக் கையாளவும், கண்காணிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை மதிக்கும் நாடு – 6-வது இடத்தில் இந்தியா…!!

சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது என லண்டன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வார்க்கி அறக்கட்டளை சார்பில் உலகில் ஆசிரியர்களின் நிலை குறித்து மக்களின் கருத்துகளை மதிப்பீடு செய்யும் ஆய்வு நடத்தப்பட்டது. உலகில் 35 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கவுரவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, கானா, சிங்கப்பூர், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!

இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2ப்ளஸ் 2 பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனா இந்தியா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்எஸ்பர்  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாண்டியோ உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுடன் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 1 லட்சம் டன்… ”வெங்காயம் இறக்குமதி”…. மத்திய அரசு திட்டம் …!!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 1முதல்…. எவை இயங்கும் ? எவை இயங்காது ?

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அக்டோபர் மாதத்திற்கான பொதுமுடக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. எனவே நவம்பர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்?  நவம்பர் 30-ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கம் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி அனுமதியே வேண்டாம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 இல் வெளியிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பயணத்திற்கு எவ்வித முன் அனுமதியும் பெற அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல மாநிலங்களுக்கிடையே செல்ல அதிகாரியின் ஒப்புதல், இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஊரடங்கு நவ.30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு …!!

ஊரடங்கு நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 30-ஆம் நவம்பர் மாதம் முப்பதாம் தேதி வரை இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்டுப்பாடுகளும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையே தனிநபர்கள் மற்றும் போக்குவரத்துக்கான எந்தவித சிறப்பு அனுமதி ஆகியவற்றுக்கு முன் அனுமதி பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 65 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா…. பாகிஸ்தான் யாரா இருந்தா என்ன ? ஒன்னும் பண்ண முடியாது – கெத்து காட்டும் இந்தியா ….!!

இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது சீனா, பாகிஸ்தானை நடுங்க வைத்துள்ளது. இன்று காலை அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் – சீனாவுக்கு ஆப்பு உறுதி …..!!

இந்தியா-அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இன்று காலை நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…!!

ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த ஆண்டு CSK கேப்டன் யார் ? – வெளியான முக்கிய அறிவிப்பு ….!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமானது. 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு முடிவுரை எழுதும் நேரமிது…. அமெரிக்கா – இந்தியா எடுக்க போகும் முடிவு …!!

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சவரத்தை நடத்துவது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இன்று முதல் – பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு …..!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல், மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்வதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரு திட்டத்தை அறிவிக்கின்றார். நாடு முழுவதும் உள்ள 300000 சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் மோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன தகுதி இருக்கு உங்களுக்கு ? முதல்வரை கடுமையாக விமர்சித்த நடிகை ..!!

மகாராஷ்டிர மாநில கட்சியின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும், அவர் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். முன்னதாக இவர் மும்பை காஷ்மீர் போல் உள்ளது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு தற்போது எதிர்வினை ஆற்றியுள்ள கங்கனா ரனாவத், தகுதி இல்லாமல் வாரிசு அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு அதுலாம் இனிக்குது…. இது மட்டும் கசக்குதா ? யாரை ஏமாத்துறீங்க …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி மே 17 இயக்கம் சேர்ந்த திருமுருகன் காந்தி வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்க,நாடார், யாதவர், முத்தரையர்  குழந்தைகளின் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற ”வேல்யாத்திரையை” துவங்குகிறது பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் டாக்டர் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற 'வேல்யாத்திரையை' துவக்குகிறது பிஜேபி? தமிழன் ஓட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்துக்கு இடமில்லை… நடராஜன் உள்ளிட்ட 4பேர் தேர்வு…. இந்திய அணி அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் டெஸ்ட்  போட்டி, 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணி தேர்வு நேற்று நடைபெற்றது. கொரோனா பெற்றுத்தொற்று காலம் இருப்பதால் கூடுதல் பந்துவீச்சாளர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது. கூடுதல் பந்து வீச்சளர்களாக கமலேஷ் நாகர் கோடி, கார்த்திக் தியாகி, இஷான் போரெல் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இந்திய […]

Categories
உலக செய்திகள்

இன்று பேச்சுவார்த்தை…. உற்றுநோக்கும் சீனா… முடிவெடுக்க போகும் அமெரிக்கா, இந்தியா …!!

இந்தியா மற்றும் அமெரிக்கா அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்பர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு அமைச்சர்களும் நேற்று காலை டெல்லி வந்திறங்கினர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பங்கேற்கின்றனர். இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.24,000,00,00,000 சேமிப்பு…. மாஸ் காட்டும் மோடி அரசு… கெத்து காட்டும் பாஜகவினர் …!!

பிரதமர் மோடி…. இந்தியாவின் இயற்கை எரிபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எரிசக்தி துறையில் உலகில் மூன்றாவது சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும். எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூபாய் 24 ஆயிரம் கோடி வரை சேமித்து உள்ளது. அதோடு நாடு முழுவதும் தட்டுப்பாடு இன்று எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… நாளை முதல் சொல்லிட்டாங்க… முக்கிய அறிவிப்பு …!!

கேரள மாநிலத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இம்மாதம் 15ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக 28ஆம் தேதி தொடங்குவதாகவும்,  பத்தினம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டாக இருந்தாலும்,  சரி அதற்கு முந்தைய ஆண்டாக இருந்தாலும் சரி கேரளா கனமழையால் படாத பாடுபட்டது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 7% பேர் தான் போறாங்க…. மேலும் 2மாதம் தியேட்டர் மூடல் ? பரபரப்பு தகவல் …!!

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கு திறக்கப்பட்டதால் குறைந்த அளவே மக்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க செல்வதாக ஆய்வில் தெரிவிக்கின்றது. கொரோனா காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள திரையரங்கு திறக்கப்பட்டது. தமிழகம், கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் பல வட கிழக்கு மாநிலங்களில் இன்னும் திரையரங்கம் திறக்க அனுமதி வழங்கவில்லை. […]

Categories

Tech |