Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டுகால் போதும்… சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி…!!!

இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக மொபைல் எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பூமிலேயே சுத்தமான காற்றுள்ள இடம் – எங்கு தெரியுமா…??

காற்று மண்டலத்தில் மனிதர்களின் செயல்பாடுகளால் மாசு அடையாத பகுதி இங்கு தான் உள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் மனிதர்கள் செயல்பாடுகளால் காற்று மாசுபாடு அடைந்துள்ளது. மனிதர்களின் செயல்பாடுகளான குப்பைகளை எரித்தல், வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை ஆகியவற்றால் காற்று அசுத்தமடைகிறது. மேலும் பண்டிகை காலங்களில் பட்டாசு வெடித்தல் போன்றவற்றினாலும் காற்று அதிகமாக மாசடைகிறது. டெல்லியில் காற்று அதிகமாக மாசடைந்துள்ளது. மேலும் காற்று மாசு காரணமாக வளிமண்டலத்தில் ஓசோன் படலம் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து சுத்தமான […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதன்முறை” இந்திய ராணுவத்தில் ராஜபாளைய நாய்கள்….. இனி பாருங்க இதோட மவுசா….!!

பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்க்கப்படுவதுண்டு. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் அனைத்தும் பெரும்பாலும் வெளிநாட்டு ரக வகையைச் சேர்ந்த நாய்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் மட்டுமே பாரம்பரிய தமிழ் இனத்திற்கே சொந்தமாக திகழக்கூடிய சிப்பிபாரை உள்ளிட்ட ராஜபாளைய நாட்டு நாய் வகைகளை வளர்த்து வருகின்றனர். இதுபோன்ற நாட்டு நாய்கள் தென் தமிழகத்தில் அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 2021 புத்தாண்டில்…. உலகம் முழுவதும் 14கோடி குழந்தைகள் பிறப்பு…. இந்தியா முதலிடம்…!!

வருடத்தின் முதல் நாளில் அதிகமாக பிறக்கும் குழந்தைகளின் பட்டியலை யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 60,000 குழந்தைகள் பிறக்கும் என்று கூறியுள்ளது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது, குழந்தை பிறக்கும் முதல் பத்து நாடுகளும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் சேவை ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in  மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் கடைகளில் பொருள் வாங்கினால்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

இனிமேல் ஷாப்பிங் மால் மற்றும் கடைகளின் கேரி பேக்குகளுக்கு தனியாக பணம் வசூல் செய்யக்கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாம் அனைவரும் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் போது கேரி பேக்குகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அனைத்து கடைகளிலும் கேரிபேக் உங்களுக்கு தனியாக பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பணம் வசூல் செய்யக்கூடாது என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஷாப்பிங் மால் […]

Categories
உலக செய்திகள்

மகன் இல்லாத சமயத்தில்…. மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்… மாமனாரின் வெறிச்செயல்…!!

மாமனார் ஒருவர் மருமகளைக்  கொன்று கடற்கரையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  மும்பையை சேர்ந்த பங்கஜ் என்ற நபர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் பங்கஜ்ஜின் தந்தை கமல் ராய்க்கு இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தன் மருமகளின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பங்கஜ் வேலைக்காக கிளம்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நந்தினியை கமல் ராய் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல கணினி நிறுவனம்… வெளியான அதிர்ச்சி தகவல்… 40 ஆயிரம் அபராதம்…!!!

தனது கணினி வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியை சரி செய்து தராததால் எச்பி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கணினி பயன்படுத்தும் நபர்கள் வாங்குகின்ற கணினி, மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். அவற்றின் தரம் அறிந்து வாங்கும்போது அதற்கான வாரண்டி கொடுக்கப்படுவது வழக்கம். அதில் சில கணினி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வாரண்டி […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குவோருக்கு இன்று முதல்… அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கிகளில் புதிய மாற்றம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் புதிய பாதுகாப்பு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி என்பது நம்முடைய பண பரிமாற்றம் மற்றும் கடன் தேவைக்கு பயன் படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போல, காசோலை வாயிலாக மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகில் சோகம்…!!!

திரை உலகில் மிக பிரபலமான நர்சிங் யாதவ் இன்று திடீரென உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் (52) இன்று திடீரென காலமானார். அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் நடித்த […]

Categories
தேசிய செய்திகள்

வேலைக்கு செல்பவரா நீங்கள்…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர் கணக்கில் பிஎஃப் வட்டி விகிதம் ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர்கள் கணக்கில் பிஎஃப் வட்டி 8.5% ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகளில் புதிய மாற்றம் – அதிரடி அறிவிப்பு…!!

காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் positive pay என்ற பாதுகாப்பு முறை அமலாக உள்ளது. வங்கி என்பது நம்முடைய பணப் பரிமாற்றத்திற்கும் கடன் பெறுவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போன்று காசோலை வாயிலான மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வகையில் போலியான காசோலைகளை  தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காசோலை பரிவர்த்தனையை பாதுகாப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா…. இந்தியாவில் 25 பேர் பாதிப்பு…. வெளியான தகவல்…!!

புதுவகை கொரோனாவால் இந்தியாவில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது புதியதாக வீரியமிக்க உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் வீரியமிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகை கொரோனா முந்தைய கொரோனாவை விட வேகமாக பரவும் என்றும், வீரியமிக்கதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புது வகைக் கொரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க அனுமதி… மார்ச் 1 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்த சிம் இருக்கா?… நாளை முதல் இலவசம்… செம சூப்பர் அறிவிப்பு….!!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் நாளை முதல் மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் தற்போது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து பேசி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரியில் இந்த நாட்களில்…. வங்கி செயல்படாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

2021 வருடம் ஜனவரி வங்கி விடுமுறைக்கான முழுபட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 வருடம் வாரும் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும்  சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் செயல்படாது. மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

மிக மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… வீரவணக்கம்…!!!

இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களில் ஒருவரான கர்னல் நரேந்திர புல் குமார் இன்று காலமானார். இந்திய ராணுவத்தின் மிக சிறந்த வீரர்களின் ஒருவரும், மலையேற்ற வீரருமான கர்னல் நரேந்திர புல் குமார் (87) டெல்லியில் காலமானார். அவர் 1965-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அளவிட்ட இந்திய குழுவில் இடம்பெற்றவர். சியாச்சின் பனிமலை முழுவதையும் பாகிஸ்தான் கைப்பற்றத் திட்டமிட்டு இருந்தபோது தனது குழுவினருடன் அதிரடியாக இமயத்தின் ஏழு மலைகளை கடந்து சென்று பாதுகாத்த பெருமை அவரையே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டாயம்… பாஸ்டேக் எப்படி ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வது?…!!!

நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை நடக்காத அதிசயம்… 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம்… என்னனு நீங்களே பாருங்க….!!!

வரும் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஜோதிடர்கள் அதிசய மாதமாக பார்க்கின்றனர்  . கடந்த ஆண்டுகளில் நிகழாத அதிசய நிகழ்வாக வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகியகிழமைகள்  நான்கு முறையும், சில கிழமைகள் 5 முறையும் வரும். ஆனால் 2021 புத்தாண்டில் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் இதுவரை காணாத அதிசயமாக ஏழு கிழமைகளும் நான்கு நாட்கள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும்… பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது.  அதனால் புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா… தமிழகத்தில் ஒருவர்… இந்தியாவில் 25 பேர்… அதிர்ச்சி…!!!

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 25 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் இந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் புகைப்படங்களை…. மார்பிங் செய்து…. மர்ம நபர் செய்த காரியம் …!!

மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல்… இந்தியாவும் அனுமதி?…!!!

பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா பரவி வருவதால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் தர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க கிரெடிட், டெபிட் கார்டு வச்சிருக்கீங்களா… நாளை முதல் செம அறிவிப்பு…!!!

செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்யாமல் பணம் செலுத்தும் வரம்பு நாளை முதல் அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அது நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் கார்டு. இது நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு பணம் செலுத்த முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வரம்பில் இருந்து விதிகளை கடன் வாங்க உங்களை அனுமதிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ரூ 7,37,74,500… “துபாயில் வேலையை இழந்து தவித்த இந்தியருக்கு”… அடித்தது ஜாக்பாட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தனது வேலையை இழக்கப் போகும் தருவாயில் ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்த சம்பவம் நடந்துள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியரான நவ்னீத் சஞ்சீவன் வேலையை இழப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா காலகட்டம் காரணமாக தன்னுடைய வேலையை இழக்கும் தருவாயில் இருந்தார். டிசம்பர் 28-ஆம் தேதி தான் இவருக்கு அலுவலகத்தில் கடைசி நாள். அதற்கு முன்பு அவருக்கு ஒரு மில்லியன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் பிப்.,15-ம் தேதி வரை நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு…!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாகும். எல்லா வியாபாரம், தனிநபர்கள் ஒவ்வொருவரும் வரி ஏதும் கடன் வாங்கி உள்ளார்களா அல்லது வரி […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஜனவரி 31ஆம் தேதி வரை… அரசு அதிரடி உத்தரவு…!!!

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு தினத்தன்று…. தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை…!!

புத்தாண்டன்று இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி-2 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலரும் பலரும் பலியாகினர். இதே போன்று தற்போது மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானப்படைத் தளங்கள், கப்பல் படைத்தளம், மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் ராணுவத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இன்று இரவு, நாளை, நாளை மறுநாள்… நாடு முழுவதும் ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதனால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பிரிட்டன் விமான சேவை… ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!!

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து தடை உத்தரவு ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நாளையே கடைசி… தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்… 2 ஆண்டு சிறை… உடனே போங்க…!!!

இந்த நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை குறிவைக்கும் கொடிய நோய்… ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்… உஷார்…!!!

இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தினந்தோரும் புதிய புதிய நோய்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த வருடம் 13.9 லட்சமாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாகவும் உயரும் என்று ஐ சி எம் ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

5 கோடி பேருக்கு மருந்து ரெடி…! இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி… வெளியான புதிய தகவல் ..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 கோடி தடுப்பு மருந்துகள் தயாராக உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகியவையுடன் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கி வந்தது. தங்களின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை வினியோகிக்கப்படும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா ” இந்தியாவில் 6 பேருக்கு உறுதி”… வெளியான தகவல்..!!

இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய கொரோனாவால் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனவைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கனவே இருக்கும் வைரசை விட 70% வேகமாக பரவக்கூடியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு கடந்த வாரம் செயல்படுத்தி வருகிறது. எனினும் தீவிரம் அடைவதற்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 22 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த ஒரு பெண்ணிற்கு தொற்று உறுதியான நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விலை கட்டுக்குள் வந்துடுச்சு…! உங்க இஷ்டப்படி செய்யுங்க…. மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது விலை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! எல்லாரும் வாங்க…. நாளைக்கு பேசுவோம்…. மத்திய அரசு அழைப்பு ….!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தேதியை மாற்றியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் சுமார் 40 விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சீன மொபைல்கள்…. விற்பனையில் சாதனை…!!

இந்தியாவில் சீன மொபைல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. லடாக் எல்லையில் சீன வீரர்களின் லடாக் பிரச்சினை காரணமாக சீன ஆப்களை இந்தியா தடை செய்து வருகின்றது. இந்நிலையில் ஐடிசி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனத் தயாரிப்புகளான ஜியோமி, விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ ஆகிய பிராண்டுகளின் 63.01  லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் லடாக் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: இந்தியாவை உலுக்கும் பரபரப்பு சம்பவம்…. தொலைந்துபோன மனிதநேயம்…!!

நபர் ஒருவரை நடு ரோட்டில் கம்பியால் சரமாரியாக இருவர் தாக்கியுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும்  பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாதது போல் […]

Categories
தேசிய செய்திகள்

புதியவகை கொரோனா இருக்கா ? ஒடிசாவில் 62பேர் மாயம்…. அதிர்ச்சி தகவல் …!!

பிரிட்டனில் இருந்து ஒடிசா திரும்பிய 62 பேர் மாயமாகியுள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, அங்கிருந்து இந்தியா திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 30-ம் தேதியில் இருந்து, கடந்த 21-ம் தேதி வரை 119 பேர், பிரிட்டனில் இருந்து ஒடிசா திரும்பியுள்ளதாகவும், இதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. நாடு திரும்பியவர்களில் 62 பேர் போலி தொலைபேசி எண்களை தந்துள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துட்டாங்க…! 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி …!!

பிரிட்டனில் இருந்து டெல்லி திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரிட்டனில் இருந்து டெல்லி திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று, புதிய வகை கொரோனாவா என்பது, ஓரிரு தினங்களில் தெரிய வருமென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இது வீரியமான கொரோனா…! இங்கேயும் வந்துடுச்சு…. இந்தியாவுக்கு புது சிக்கல் …!!

பிரிட்டனில் பரவும் வீரியம் மிக்க கொரோனாவுக்கு, இந்தியாவிலும் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் மிகப்பெரும் பிரச்னையாக இருந்துவரும் நிலையில், தற்போது, வீரியத்துடன் புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள மற்றொரு வைரஸ் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது, பிரிட்டனில் வீரியம் மிக்க கொரோனா அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 10இடத்துல இருக்கு….! நாடு முழுவதும் மத்திய அரசு – மிக முக்கிய உத்தரவு …!!

நாடு முழுவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை 10 ஆய்வகங்களில் நடைபெறுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 சதவீத மாதிரிகளை அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வைரசின் தன்மை குறித்தும், பரவும் விகிதம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

“மனித உயிருக்கே எமனான” ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்…. தடையை மீறி விற்பனை…!!

உயிருக்கு ஆபத்தான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடையை மீறியும் விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தான் வாழ்வதற்காக பிற மீன் இனங்களை அடியோடு அழிக்கும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரி மீன்களில் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் நாட்டை சேர்ந்த குளத்து மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் கிடையாது. அவை சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக நம்முடைய […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை குறிவைக்கும் புற்றுநோய் – ஆய்வில் தகவல்…!!

இந்தியாவில் புற்றுநோயினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய்களினால் இறப்பும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாக உயரும் என்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: புதிய வைரஸ், நாடு முழுவதும்… அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாந்தமாக இருந்துக்கொண்டே ஆக்ரோஷ ஆட்டம் –  ஆட்ட நாயகன் கேப்டன் ரஹானே ….!!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பாக்சிங்டே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் ரஹானே. அடிலெய்டில் தோல்வி, கேப்டன் கோலி இல்லை, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷமி இல்லை என்பது மாதிரியான நெருக்கடியான நிலையில், “இந்தியா இந்தத் தொடரில் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சொல்லி வந்தபோதும் அசராமல் அணியை திறம்பட வழிநடத்தியதோடு, தனிப்பட்ட முறையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் ரஹானே. நல்ல வேளையாக ஆஸ்திரேலியா டாஸ் […]

Categories

Tech |