உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், உதவிடக் கூடிய வகையிலும் கடந்த 2007ஆம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களில் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம்பெற்று, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
