இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் -பிரித்வி ஷா ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ஷிகர் தவான் 3 பவுண்டரிகளை அடித்து விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய […]
