ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் டி20 உலக கோப்பை போட்டியில் முக்கிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி 20 உலக கோப்பை […]
