இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,090 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து நேபாளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]
