இந்தியாவின் கவிக்குயில், நைட்டிங் கேர்ள் என்று அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு கடந்த 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெங்காலி பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனராக இருந்தார். அதோடு சிறந்த கவிஞராகவும், விஞ்ஞானியாகவும், தத்துவஞானியாகவும் அவர் திகழ்ந்தார். அதன் பிறகு சரோஜினி நாயுடுவின் தாயார் பரத சுந்தரி தேவி ஒரு சிறந்த கவிஞர் ஆவார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிங் கல்லூரி […]
