Categories
தேசிய செய்திகள்

திடீரென தீப்பிடித்து எறிந்த விமானம்… காரணம் என்ன…? விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி உத்தரவு…!!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கை திடீரென தீப்பிடித்து எறிந்ததால் டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சினில் உள்ள ஒரு பகுதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“வெடிகுண்டு மிரட்டல்”…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ விமானம்….!!!!!

கர்நாடகாவின் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அவற்றில் 175 பயணிகள் இருந்துள்ளனர். இதனிடையில் விமானத்தின் கழிவறையில் மிரட்டல் குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதை விமான சிப்பந்தி ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து இது பற்றி விமான கேப்டனிடம் தெரிவித்து இருக்கிறார். அதாவது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. அதன்பின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை முறையாக அனுமதி பெற்று விமான நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ஜின் அதிர்வு எதிரொலி!… இண்டிகோ விமானம் திடீரென ஜெய்ப்பூரில் தரையிறக்கம்….!!!!

டெல்லியிலிருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் விமானத்தின் என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் என்ஜின் அதிர்வு தொடர்பாக பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் விமானம் தரையிறக்கம் பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த பெண் குழந்தை… பிரசவம் பார்த்த மருத்துவருக்கு… குவியும் பாராட்டு ..!!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில்  நடுவானில்  ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று காலை 5.45 மணி அளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமான குழுவினர் அந்தப் பெண்ணின் நிலைமையை புரிந்து கொண்டு விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருப்பார்களா என்று விசாரித்தனர். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக மருத்துவர் சுபஹான் நசீர் […]

Categories
தேசிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு செம மகிழ்ச்சி அறிவிப்பு..!- Wow..!!

இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணத்தை அதிரடியாக குறைந்துள்ளது. இண்டிகோ விமானம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை ரூபாய் ரூ. 877 ரூபாய்க்கு டிக்கெட் சலுகையை கொடுத்துள்ளது. இண்டிகோவின் சமீபத்திய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். இண்டஸ்லேண்ட் வங்கி அட்டையைப் பயன்படுத்தி சலுகைக் காலத்தில் இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இண்டஸ்இண்ட் வங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பிறந்த குழந்தை…. விமான நிறுவனம் கொடுத்த பரிசு…!!

இன்டிகோ விமானத்தில் நடுவானில் பிறந்த குழந்தைக்கு தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்வதற்கான சலுகை வழங்கப்பட்டது. இண்டிகோ வின் 6E 122 விமானம் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென விமானத்தில் வைத்து பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பணிப்பெண்களின் உதவியுடன் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து […]

Categories

Tech |