Categories
தேசிய செய்திகள்

அசாமில் 2வது முறையாக… 27 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்…!!!!!

வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான அசாமில் இடைநிலை கல்வி வாரியம் அசாம் நடத்தும் அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 3 குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கின்ற சுமார் 30000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதில் குரூப்-4 தேர்வுகள் கடந்த 21 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் குரூப் 3 தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது. மேலும் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதியும் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் இணைய சேவை….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 mbps பிராட் பேண்ட் இணைய சேவையை கேரள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் தற்போது பாரத் சஞ்சர் நிகம் லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து புதிய சேவை ஒன்றை தொடக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் 8 mbps FTTH இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 100 பிராட் பேன்ட் இணைய இணைப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் கேரளா […]

Categories
உலக செய்திகள்

பல மணி நேரம் மின்சாரம் இல்லை…. மொபைல், இணைய சேவை கட்…. பொதுமக்கள் கடும் ஷாக்….!!!

பாக்கிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் நாடு முழுவதும் நீடித்த மின்வெட்டுக்குப் பிறகு மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர். நாட்டில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்படுவதால் மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் எச்சரித்துள்ளனர். மின்வெட்டால் தொலைத்தொடர்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும் என தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் (என்ஐசிபி) தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் நாடு சுமை கொட்டும் நிலைக்குச் செல்லும் என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் திங்களன்று எச்சரித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 10 வருடங்களுக்குள்…. 6 ஜி இணைய சேவை…. பிரதமர் அறிவிப்பு….!!!!

தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ அமைப்பின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது. 21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…. கீவ்வில் இணைய சேவை பாதிப்பு…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”…. சேதமடைந்த செயற்கைக்கோள்கள்…. அதிர்ச்சியில் பிரபல நிறுவனம்….!!!

அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் நிறுத்தப்பட்ட  40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. எலான் மஸ்க் என்பவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர் அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் 40 செயற்கைக்கோளை நிலைநிறுத்தி உள்ளார். தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ்  எஜக்சன் என்ற ஒரு மாபெரும் நிகழ்வு வெளியேறியுள்ளது. இதனால் பூமியின் வளி மண்டலத்திற்கு மிக அருகில் புவி காந்த புயல் உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி பூமிக்கு மிக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அரசாங்க வலைதளத்தை “ஹேக்” செய்த போராட்டக்காரர்கள்… இணையத்தை முடக்கிய ராணுவம்…!

மியான்மரில் போராட்டக்காரர்கள் அரசாங்க வலைதளங்களை ஹாக் செய்ததால் ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது. மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் ராணுவம் செய்த இந்த செயலால் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்தது. இதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தலைவர் […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ ஆட்சியை ஒடுக்க துண்டிக்கப்பட்ட இணைய சேவை”… மீண்டும் தொடக்கம்….!!

மியான்மரில் துண்டிக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உட்பட சில முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் சிறை பிடித்து வைத்தனர். மேலும் ஓர் ஆண்டிற்கு அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மியான்மரில் பெரும் பரபரப்பு நிலவியது. மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது  என்ற தகவல் உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் தற்போதைய நிலை தான் என்ன?: இணைய சேவை வழக்கில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை […]

Categories

Tech |