தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வசதியாக புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியது, இந்திய ரயில்வே அதன் பல்வேறு சேவைகளை இணையவழி ஏலங்கள் மூலம் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமிட்டு வருகிறது. அதன்படி தெற்கு ரயில்வே அதன் 6 மண்டலங்களில் ரூ.34.60 கோடி மதிப்பிலான 64 ஒப்பந்தங்களை இணையவழி ஏலத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது மண்டல வாரியாக சேலம் ரூ.21 கோடி, சென்னை ரூ.6.61 கோடி, மதுரை ரூ.2 கோடி, திருச்சி ரூ.1.72 கோடி […]
