கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அமைச்சர் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குமரி மாவட்டம் நிர்வாகத்தின் […]
