மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார். […]
