நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் “நித்தம் ஒரு வானம்”. தமிழ் திரையுலகில் “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு “ஓ மை கடவுளே” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் “நித்தம் ஒரு வானம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இதனை அடுத்து அசோக் […]
