திருப்பத்தூர் மாவட்டம், சவுமியநாராயணபுரம் என்ற பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதார பணியாளர்கள் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் காலை உணவாக இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது செவிலியர் ஒருவர் சாப்பிட்ட பார்சலில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உணவை சாப்பிட்ட மற்ற பணியாளர்களுக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து […]
