கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடப்படும் இடைவெளியை குறைப்பதற்கான ஆலோசனை மத்திய அரசு செய்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல என்றும் தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உயிரிழப்பை […]
