Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கெத்து காட்டும் இந்தியர்கள்…. இடைத்தேர்தலில் வெற்றிகளை குவித்து அசத்தல்…!!!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு வாழும் இந்தியர்கள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்து  நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதி சபை, செனட் சபை என்ற இரு அவைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு வருடங்கள் செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் பிரதிநிதி சபையின் பதவிக்காலம். இடைத்தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும். இந்நிலையில்  House District 30 என்னும் பிரதிநிதி […]

Categories
உலக செய்திகள்

நாடாளுமன்ற இடைத்தேர்தல்…. இம்ரான்கான் 9 தொகுதிகளில் போட்டி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இம்ரான்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில்  போட்டியிடுகிறார். பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்ட போது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேர் ராஜினாமாவை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 தொகுதிகள் பெண்களுக்கானவை. 9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இடைத்தேர்தல்…. இம்ரான்கான் கட்சி வெற்றி…. குவியும் பாராட்டு…!!

இடைத்தேர்தலில் எதிர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பகுதியில் 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெற்று ,நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் 16 இடங்களில் எதிர் கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆளும் கட்சியினர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல்

ஓ.பி.எஸ் சூப்பர் மூவ்…. இ.பி.எஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன….? எது நடந்தாலும் வெற்றி இவருக்குத்தான்….!!!

தமிழகத்தில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏ மற்றும் பி என்ற 2 படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை அ.தி.மு.க சார்பில் சமர்ப்பிப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு […]

Categories
மாநில செய்திகள்

ADMK: ‘இரட்டை இலைக்கு’ வந்த பெரும் சோதனை….. அச்சச்சோ….! என்ன இப்படி ஆயிடுச்சு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும். ஆனால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடாததால் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வரும் 30ஆம் தேதி அதாவது நாளை மாலைக்குள் படிவத்தில் கையெழுத்து வாங்கி சமர்ப்பிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவில் புதிய பரபரப்பு….. இதுவேறயா…..! எழுந்துள்ள புது சர்ச்சை….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 501 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக பிரிந்து மோதி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார். இந்நிலையில் சங்கூர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 2 பேர் போட்டியிடும் நிலையில், தேர்தல் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இடைத்தேர்தலில் போட்டியில்லை…. மக்களவை பொதுத்தேர்தலே இலக்கு…. காங்கிரஸ் அறிவிப்பு…!!

உத்தரபிரதேசம் : ராம்பூர், அசம்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்யவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. 2024ல் நடக்கும் மக்களவை பொதுத்தேர்தலே தங்களது இலக்கு எனவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உத்தராகண்ட் இடைத்தேர்தல்….. “முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி”….. வெளியான அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார்.  ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம்: இடைத்தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்….!!!!!

மேற்கு வங்கத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிகாரின் போச்சான், மராட்டியத்தின் கோலாப்பூர் போன்ற 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்தது. இந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. இத்தொகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

“இடைத்தேர்தல் எதிரொலி”…. வரும் 7ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பாதிப்புகள் வெகுவாக குறைந்து இருப்பதால் இந்த வருடம் திட்டமிட்டபடி தேர்தல்களை நடத்த பல்வேறு மாநில அரசுகள் முனைப்புகாட்டி வருகின்றன. அந்த அடிப்படையில் தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள மஜூலி மாவட்டத்தை சேர்ந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. மஜூலி தொகுதியில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பல், துறைமுகங்கள் அமைச்சர் ஆய்சு சர்பானந்தா சோனோவாலின் இடத்தை நிரப்புவதற்காக தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு முன்பாக அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கலாபென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி…. மத்திய மந்திரி கூறிய அதிர்ச்சி தகவ….!!

தத்ரா நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கல்பென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி பெறவில்லை என்று நாராயண ரானே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தத்ரா நகரில் ஹேவேலி தொகுதி எம்.பி மோகன் தெல்கர் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையைடுத்து அந்த நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் மோகன் தெல்கரின் மனைவி கலாபென் தெல்கர் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,18,035 வாக்குகள் பெற்று பா ஜனதா கட்சி வேட்பாளர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியாவில் பெரும் பரபரப்பு…. ஓட்டுக்கு துட்டு கொடுங்க… ரூ.10,000கேட்டு மக்கள் போராட்டம் ..!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பணம் வழங்கப்படுவதாகவும், பணம் கிடைக்காத பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் குஜாலாபாத் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குஜாலாபாத் எம்எல்ஏவாக இருந்த எல் ஆர். ராஜேந்திரன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதை கட்சி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வர் சந்திர சேகர் ராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைதேர்தலில் வெற்றி… நன்றி சொன்ன முதல்வர் மம்தா பானர்ஜி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தா பதவியேற்றார்.அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பவானிபூர் இடைத்தேர்தல் : முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப்  தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைத்தேர்தல்… முன்னிலையில் மம்தா பானர்ஜி… தொண்டர்கள் மகிழ்ச்சி!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 34,721 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் […]

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர்: மம்தா பானர்ஜி 2,800 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை!!

பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி 2,800 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவானது.. இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் இடைத்தேர்தல் : முன்னிலையில் மம்தா பானர்ஜி!! 

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவானது.. இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று […]

Categories
அரசியல்

அவங்க ஓட்டுக்கு ரூ.500 கொடுத்துருக்காங்க…. குற்றசாட்டை வைத்த பாஜக…!!!

பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால், தேர்தலில் வாக்களிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிசாகர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் நேற்று இடைதேர்தலானது நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் ஆகிய இருவரும் களமிறங்கினர். மம்தா பானர்ஜிக்கு வெற்றியானது எப்பொழுதும் போலவே இத்தொகுதியிலும் உறுதியாக உள்ளது. இதனையடுத்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

30 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 30இல் தேர்தல்!!

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 30இல் இடைத்தேர்தல் நடக்கிறது. ஆந்திரா, தெலங்கானா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

Categories
அரசியல்

மேற்கு வங்கத்தில் வன்முறை…. நாடகமாடும் பாஜக…. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு…!!!

மேற்கு வங்கத்தில் பாஜகவினரே தங்களது  வீடுகளில் தாக்குதலை நடத்திக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதை போன்று நாடகம் ஆடுவதாக முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜான்கிபூர், சாம்ராட்கான் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவினர் தங்களது சொந்த வீடுகளில் அவர்களே […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இடைத்தேர்தலில் மம்தாவிற்கு எதிராக…. புதிய வேட்பாளரை களமிறக்கிய பாஜக…. யார் தெரியுமா?….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுரேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருந்தாலும் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றதால், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாக வேண்டிய கட்டாயம் உருவானது. அதனால் பவானிபூர் எம்எல்ஏ மற்றும் வேளாண் துறை அமைச்சரான சுபன் தீப் சந்தோ பத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பவானிபூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்..!!

மேற்கு வங்கத்தில் 3 சட்டப் பேரவை தொகுதிக்கு செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. மேற்குவங்கத்தில் காலியாக உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.. அதேபோல ஒடிசாவின் பிப்லி சட்டப்பேரவை தொகுதிக்கும், 30ஆம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.. அக்டோபர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.. மம்தா பானர்ஜி 2011, 2016ல் பபானிபூர் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரம்!”.. ஒரு தேர்தலுக்காக நடந்த 782 வன்முறை சம்பவங்கள்.. 89 அரசியல்வாதிகள் கொலை..!!

மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் சமயத்தில் தற்போதுவரை அரசியல்வாதிகள் 89 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்காக 200 நாட்களாக நடந்து வந்த பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடத்தப்படவுள்ளது. இதில் மாகாண ஆளுநருக்கான 15 பதவி உட்பட சுமார் 20,000 பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த 200 நாட்கள் பிரச்சாரத்தில் 35 வேட்பாளர்கள் உட்பட சுமார் 89 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் தாக்குதல் சம்பவங்களும் 782 ஆக பதிவாகியுள்ளது. மேலும் பொருட்களை சேதப்படுத்துதல், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மக்களவை இடைத் தேர்தல் ஒத்திவைப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இடைத்தேர்தல்…. தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு….!!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு…” இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும்” – சுனில் அராரோ..!!

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று சுனில் அராரோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் சுனில் அராரோ தேதியை அறிவித்தார்., தமிழ்நாடு , கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மார்ச் 12ஆம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருப்பதியை குறிவைக்கும் பாஜக… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தென்மாநிலங்களில் தடத்தைப் பதிக்க முயற்சிக்கும் பாஜக தற்போது திருப்பதி இடைத்தேர்தலை குறி வைத்துள்ளது. திருப்பதி மக்களவைத் தொகுதியில் இடைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன் வியூகம் தொடர்பாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் பல்லி துர்கா பிரசாந்த் ராவ் சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் தென் மாநிலங்களில் தடத்தைப் பதித்த முயற்சிக்கும் பாஜக, அதன் […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு… மக்கள் போட்ட கண்டிஷன்… ஆடிப்போன அரசு…!!!

கேரளாவில் குரங்குகளை பிடிப்பதாக வாக்குறுதி தருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை யார் பிடிப்பதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளா வயநாடு கல்பேட்ட பகுதியில் பொது மக்கள் வெளியில் நடமாட அளவிற்கு குரங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை …!!

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை நடைபெருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு ஜோதிரா சந்தியா தலைமையில் 28 எம்.எல்.ஏ -கள் விட்டு விலகியாதை அடுத்து கவிழ்த்தது. இதையடுத்து சிவரத்சிங்க் சவுகான் தலைமையிலான பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று நடந்த இடைத் தேர்தல்… மர்ம நபர் துப்பாக்கி சூடு… வாக்கு சாவடியில் பரபரப்பு…!!!

நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்றன 54 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 54 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் இடைத் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல் கிடையாது… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கின்ற திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது கிடையாது. அதுமட்டுமன்றி அசாம்,கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காலியாக இருக்கின்றதே தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட ஆறுமாதத்தில் நடத்தக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்போது இடைத்தேர்தல் கிடையாது… தேர்தல் ஆணையம் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக இருக்கின்ற திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது கிடையாது. அதுமட்டுமன்றி அசாம்,கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காலியாக இருக்கின்றதே தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட ஆறுமாதத்தில் நடத்தக்கூடிய நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில்… காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…!!

தமிழகத்திலும் காலி இடங்களுக்கான தேர்தலை பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பீகார் சட்டமன்ற தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 65 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து வழிமுறைகளை வழங்க நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில், கனமழை, கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் இடைத்தேர்தல்தளை தள்ளிவைக்கலாம் எனக் கோரிக்கை எழுந்து வந்தது. அந்த வகையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பர் 7 வரை – அதிரடி அறிவிப்பு ….!!

டெல்லியில் இன்று காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு மாநில தேர்தல் அலுவலர்கள் கருத்தை கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி விளக்கம் …!!

தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டர்மன்ற தொகுதி காலியாக உள்ளன.மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு தேதி முடிவு செய்யவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |