ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 31 பெண்களை தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற இடைத்தரகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். அதில் சில வட மாநிலத் தொழிலாளர்களை இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் […]
