அசாம் மாநிலம், முழுவதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை கழகத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாவது: “கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாட்களில் 1410 கிராமங்களில், 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. […]
