வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளா.ர் விவசாயியான இவர் தனது வயலில் மனைவி உமையேஸ்வரியுடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி மீது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து செல்லபாண்டியனை பெருநாழி அரசு […]
