பலத்த மழையால் வீடுகள் இடிந்த குடும்பங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல், ராசிபுரம், கூனவேலம்பட்டி புதூர், முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து ராசிபுரம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சவுந்தரம், இளங்கோ ஆகிய 2 பேருடைய வீடுகள் இடிந்து […]
