பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டடம் ஓன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர். கராச்சியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து மூத்த காவல் அலுவலர் அல்தாப் உசேன் கூறியதாவது , “கட்டட இடிந்து விழுந்தவுடன் எங்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். முதலில் ஒருவரது சடலம் மட்டும் தென்பட்டது. […]
