குளித்தலையில் உள்ள அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டு இருக்கின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கின்றது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகின்றது. இதனால் மாணவ- மாணவிகள் திறந்தவெளியில் பள்ளி வராண்டாவில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. […]
