தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு வினாத்தாளில் பரியேறும் பெருமாள் திரைப்படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்தக் கேள்வியானது, தலைசிறந்த […]
