ராட்சத அலையில் சிக்கி மீட்கப்பட்ட 2 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் சக்திகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திகுமார் தனக்கு சொந்தமான படகில் பாஞ்சாலன், முருகேசன், நாகூர் பிச்சை, நந்தகுமார் ஆகியோருடன் மீன்பிடிப்பதற்காக கோடியக்கரை கடல் பகுதியை நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து மீன் பிடித்து விட்டு கரையை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையால் இவர்களின் படகு தண்ணீரில் […]
