இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜா, 1997ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரது இசை சேவைகளை கௌரவிக்கும் விதமாக சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
