கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியின் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதை பார்க்க வருபவர்களுக்கு இலவச அனுமதி என்றவுடன் சுமார் 15,000 பேர் அங்கு கூடி உள்ளனர். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கல்லூரியின் மதில் சுவரில் ஏறி ரசித்துள்ளனர். சுற்றுச்சுவர் மீது அதிகம் பேர் ஏறியதால் சுவர் இடிந்து விழுந்துள்ளது. […]
